×
 

சென்னை ஏர்போர்ட் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்..! பயணிகள் செம குஷி..!

கோடை விடுமுறையை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கழிக்கும் விதமாக கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படும் என சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

கோடை வெயில் சுட்டு வித்து வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் கல்வி நிலையங்களில் கோடை விடுமுறை தொடங்கி விடும். இதனால் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்று வருவர். அவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது இருக்கும் அளவிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை-இலங்கை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம் வாரத்தில் 7 விமானங்களை இயக்கி வந்த நிலையில் 10 விமானங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை-இலங்கை இடையே 7 விமான சேவைகளை புதிதாக தொடங்க இருக்கிறது. 

இதையும் படிங்க: கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள்.. பயணிகள் 2 பேர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

மேலும் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூடை சிறப்பாக சென்னை - யாழ்ப்பாணம் இடையே வாரம் ஏழு விமான சேவைகளை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை குவைத் இடையே இனிமேல் வாரத்தில் ஏழு விமானங்களும், சென்னை - மஸ்கட் இடையே வாரத்தில் இனி இரண்டு நாட்களும், சென்னை - தமாம் இனி வாரத்தில் மூன்று நாட்களும் விமான சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை குவைத் இடையே இனி வாரத்தில் ஏழு நாட்கள் விமான சேவை வழங்க உள்ளதாகவும், ஓமன் ஏர்வேஸ் நிறுவனம் சென்னை மஸ்கட் இடையே 11 விமானங்களை இயக்கி வந்த நிலையில் இனி 14 விமானங்களாக இயக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர சென்னை பக்ரைன் இடையே கல்ப் ஏர்வேஸ் நிறுவனம் 10 விமானங்களையும், சென்னை-டாக்கா இடையே யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் நிறுவனம் இனிமேல் 11 விமானங்களை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல் உள்நாட்டு விமானங்களில், ஏர் இந்தியா விமான நிறுவனம் சென்னை-பெங்களூரு இடையே 23 விமானங்களையும், டெல்லிக்கு 77 விமானங்களையும், மதுரைக்கு 14 விமானங்களையும், மும்பைக்கு 49 விமானங்களையும் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், கொச்சிக்கு 14 விமானங்களையும், கவுகாத்திக்கு 21 விமானங்களையும், ஹைதராபாத்துக்கு 21 விமானங்களும், நொய்டா, வாரனாசிக்கு 7 விமானங்களும் புதிதாக இயக்க உள்ளது.

இதையும் படிங்க: இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி இசை... இளையராஜா பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share