திருப்பதியில் 100 மாடுகள் இறப்பு? வெளிவரத் துவங்கும் தேவஸ்தான முறைகேடுகள்..!
ஆந்திராவில் முந்தைய ஆட்சியாளர்கள் ஊழலில் திருப்பதி தேவஸ்தானத்தின் பசுத் தொழுவங்களை கூட விட்டு வைக்கவில்லை என அறங்காவலர் குழுத்தலைவர் பி.ஆர். நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர்.காங்., மூத்த தலைவரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான கருணாகர ரெட்டி, கடந்த மூன்று மாதங்களில், தேவஸ்தானம் நடத்தும் கோசாலையில், 100க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழந்ததாக சமீபத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோசாலையில் எந்த ஒரு மாடும் இறக்கவில்லை என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆனால், தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, 22 மாடுகள் மட்டுமே இறந்ததாகக் கூறினார். அதே நேரத்தில் செயல் தலைவர் ஷ்யாமளா ராவ், 43 மாடுகள் இறந்ததாகக் கூறியுள்ளார். வெளிப்படையான நிர்வாகத்தை அவர்கள் வழங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என கருணாகர ரெட்டி கூறினார்.
இந்த நிலையில் ஆந்திராவில் அகில இந்திய பசு பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் தேவஸ்தான பசு பாதுகாப்பு உறுப்பினருமான கோடி ஸ்ரீதர், அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிராகாஷ் உடன் தலைவர் பி.ஆர். நாயுடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தான கோசாலை (பசுத் தொழுவங்களை) ஆய்வு செய்தார்.
தற்போதைய கோசாலை பொறுப்பாளர் ஸ்ரீனிவாஸிடம், தற்போதைய தீவனம், குடிநீர், சுகாதாரம் மற்றும் மாடுகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறதா என்பது குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் ஸ்ரீ பி.ஆர். நாயுடு, முந்தைய ஆட்சியாளர்கள் தேவஸ்தானத்தின் மாட்டுத் தொழுவத்தில் பசுக்களுக்கு வழங்கும் புல்லைக் கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தோண்ட தோண்ட முறைகேடுகள்.. 39,000 புரோக்கர்கள் பிளாக் லிஸ்ட்.. அதிர்ச்சியில் திருமலை திருப்பதி..!
தற்போது பசுக்கள் இறந்து விட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடர வேண்டும் என பலர் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். மாநிலத்தில் சந்திரபாபு தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை.
சிலர் வேண்டுமென்றே தேவஸ்தானத்தில் ஏதோ நடப்பது போல் காட்ட முயற்சிப்பதும், அரசியலில் திசைதிருப்பம் செயலில் ஈடுபடுவதும் சரியல்ல. தேவஸ்தான பசு பாதுகாப்பு முந்தைய ஆலோசகர் ஸ்ரீ கோட்டி ஸ்ரீதர் கூறுவதை பார்த்தால், பசு காப்பகத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி எங்களுக்கு தெரிந்தது கொஞ்சமே, இன்னும் நிறைய நடந்திருக்கிறது.
ஓங்கோலில் தேவஸ்தான பசு மாடுகள் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தேவஸ்தான பசுத் தொழுவத்தின் இயக்குநராக முன்பு பணியாற்றிய டாக்டர். ஹரிநாத் ரெட்டி இந்த பசுத் தொழுவத்தை தனது சொந்த எஸ்டேட்டாகக் கருதி பெரும் முறைகேடுகளைச் செய்தார் என்பது அறியப்படுகிறது. மாட்டுத் தொழுவத்திற்குள் யாரையும் உள்ள அனுமதிக்காமல் ஹரிநாத் ரெட்டி ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டுள்ளார். எனவே தேவைப்பட்டால் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணை கோரப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அறங்காவலர் குழு உறுப்பினர் ஜி. பானு பிரகாஷ் ரெட்டி கூறுகையில் பசுத் தொழுவங்களில் பசுக்கள் இயற்கையாக இறப்பது குறித்து தவறான பிரச்சாரத்தைப் பரப்பியதற்காகவும், தேவஸ்தானத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காகவும் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர் ரெட்டி மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே தவறான குற்றச்சாட்டிற்கு சட்டங்களிலிருந்து தப்பிக்க முடியாது என்று கூறினர்.
இதையும் படிங்க: பதவிப்பறிப்பா? என்ன முடிவுனாலும் ஏத்துக்குறேன்! வைகோவிடம் பணிந்த மல்லை சத்யா!