கிரையோஜனிக் என்ஜின் சோதனை வெற்றி.. மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்..!
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக்கு எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திலிருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரயோஜனிக் என்ஜின், விகாஸ் எஞ்சின், பிஎஸ்4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை மட்டுமின்றி மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளின் சோதனைகளும் இங்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜிஎஸ்எல்வி, சி.இ. 20 கிரயோஜனிக் இ-15 என்ஜிணின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி நூறு வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ தொட்ட மட்டும் இருந்த நிலையில் கவுண்டன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையை மகேந்திரகிரி இஸ்ரோ மை இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: டீக்கடைக்குள் புகுந்த இஸ்ரோ பேருந்து.. இருவர் பலி..
இதையும் படிங்க: புர்கா அணிந்த பெண்ணை இழிவாக பேசிய விவகாரம்.. சுங்கத்துறை பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!