டீக்கடைக்குள் புகுந்த இஸ்ரோ பேருந்து.. இருவர் பலி..
நெல்லையிலிருந்து காவல் கிணற்றில் உள்ள இஸ்ரோ அலுவலகத்திற்கு பணியாட்களை ஏற்றி சென்ற பேருந்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லையிலிருந்து காவல் கிணற்றில் உள்ள இஸ்ரோ அலுவலகத்திற்கு பணியாட்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பாம்பன் குளம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.
அப்போது டீக்கடையின் முன்பு நின்று கொண்டிருந்த கிருஷ்ணன் மற்றும் குணசேகரன் ஆகிய இருவரும் மீது பேருந்து மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து அக்காமக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் குணசேகரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கிருஷ்ணன் நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.
இதையும் படிங்க: எமனாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்.. சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்கள்!
முன்னதாக தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பேருந்து ஓட்டுனர் குறித்த விவரங்களை பெற்றப்பின் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து.. கணவன் கண் முன்னே மனைவி மற்றும் மகன் பலி..