ரூ.500க்கு சிலிண்டர், 300 யூனிட் மின்சாரம் இலவசம்: டெல்லியில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி..
டெல்லி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளது.
டெல்லி மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது, 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்தியா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியும் எதிரும் புதிராக போட்டியில் உள்ளன, பாஜகவும் 25 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதனால் டெல்லி தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவு இல்லாத நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு சமாஜ்வாதி,தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் 3வது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் பணியாற்றி வருகிறது.
ஆனால்,25 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. மத்தியில் 3 வதுமுறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ள பாஜகவால், டெல்லியைக் கைப்பற்ற முடியாதது பெரிய குறையாகும். இந்த முறை டெல்லியை கைப்பற்றும் முயற்சியில் வியூகங்களை பாஜக அமைத்துள்ளது. இதற்காக முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மீண்டும் மதுபார் வழக்கு விவகாரத்தை அமாலக்கப்பிரிவு மூலம் கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான ரேவந்த் ரெட்டி, டெல்லி மாநில காங்கிஸ் பொறுப்பாளர் குவாசி நிஜாமுதீன், மாநிலத் தலைவர் தேவேந்திர யாதவ் ஆகியோர் நேற்று கூட்டாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 5 முக்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். குறிப்பாக ரூ.500க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், ரேஷன் பொருட்கள் இலவசமாக தரப்படும். தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு ஓர் ஆண்டில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு வேளாண் கடனை தள்ளுபடி செய்து வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. 210 கோடி ரூபாய் மின் கட்டணமா? அதிர்ந்து போன வியாபாரி....
மத்தியில் ஆளும் பாஜக, பிரதமர் மோடிக்கும், ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தேசியத் தலைவருக்கு எந்த பணியையும் இருவரும் செய்யவில்லை. டெல்லியில் காங்கிரஸ் கட்சி நியாய யாத்திரை நடத்தி, மக்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொண்டோம், அதன் மூலம் 5 முக்கிய தேவைகளை வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். மெகாங்கை முக்தி யோஜனா, ப்ரீ பிஜிலி யோஜனா ஆகிய இரு வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இது தவிர மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2500 உதவித்தொகையும், “பியாரரி தீதி யோஜனா” திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இது தவிர ரூ25 லட்சத்துக்கு சுகாதாரக் காப்பீடும் இலவசமாக வழங்கப்படும். மாதம்தோறும் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஓர் ஆண்டுக்கு உதவித்தொகையாக ரூ.8500 வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிச்சயம் நிறைவேற்றும்
இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரூ.500க்கு சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம்.. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தாராளம்!