×
 

இது மோடி சர்க்கார்..! பதில் சொல்லியே ஆகணும் Mr. ராகுல்.. டெல்லி அமைச்சரின் வைரல் வீடியோ..!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வெளிவரும் நிச்சயம் ராகுல் காந்தி பதில் சொல்லியே ஆக வேண்டும் என டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறியுள்ளார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களால் பல்வேறு இடங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காந்தி குடும்பத்தையும் காங்கிரஸையும் சேர்ந்த சில குண்டர்கள் இப்போது தெருக்களில் இறங்கி குண்டர் செயலில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: வக்ஃபு மசோதா சட்டவிரோதமானதா? நான் ராஜினாமா செய்வேன்..! சவால் விட்ட பாஜக எம்.பி.!

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ எவ்வாறு அவர்களை விசாரிக்க முடியும் என்று கேட்பதாகவும், நாங்கள் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சட்டம் எங்களுக்குப் பொருந்தாது என நினைப்பதாகவும் தெரிவித்தார். ராகுல்காந்தியிடம் ஒன்றை சொல்ல விரும்புவதாக கூறிய அவர், முன்பு அப்படி இருந்திருக்கலாம், இப்போது அப்படி இல்லை. ஏனென்றால், இது மோடியின் அரசாங்கம் என்றும் நீங்கள் கணக்கை சமர்ப்பித்தே ஆக வேண்டும் எனவும் திட்டவட்டமாக கூறினார். 

சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்காக நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு போன்ற ஒரு செய்தித்தாளை கொள்ளையடித்துள்ளதாவும், உண்மை வெளிவரும், நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி..? பதில் அளிக்க மறுத்த நயினார் நாகேந்திரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share