திமுகவின் ஆக்கம்கெட்ட கூட்டணி... விஜயின் பேராசையால் அதிமுக எடுத்த ஊக்கமான முடிவு: பழ.கருப்பையா பொளேர்..!
ஹிந்தி கொள்கை, இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கான ஆதரவு எல்லாவற்றிலும் அதே நிலைப்பாட்டில் தான் அதிமுக இருக்கிறது.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் மும்மொழிக் கொள்கை, வக்ஃபு மசோதா போன்றவற்றில் தனது கொள்கையை விடாமல் காப்பாற்றி வருகிறது அதிமுக என மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா ஆதரவு தெரிவித்துள்ளார்.
தற்போது எந்த கட்சியிலும் இல்லாவிட்டாலும், மனதில் பட்டத்தை பட்டென போட்டு உடைத்துவிடுவார் பழ.கருப்பையா. அந்த வகையில், இஸ்லாமியர்களை அருகில் வைத்துக் கொண்டு நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசி அவர், '' உண்மையிலேயே பாவம் இந்த எடப்பாடி பழனிச்சாமி. விஜயுடன் சேர்ந்து ஒரு மதச் சார்பற்ற கூட்டணியைத்தான் அவர் உருவாக்க நினைத்தார். ஆனால், விஜய் ''எனக்கு பாதியிடம், உனக்கு பாதி இடம். நான் இரண்டை வருடம் முதலமைச்சர். நீ இரண்டரை வருடம் முதலமைச்சர்'' என்று சொன்னதினால் தான் எடப்பாடி பழனிச்சாமி வெளியேறி விட்டார்.
இதையும் படிங்க: கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு.. திமுக கூட்டணியை உடைக்க ஆசைவார்த்தை.. திருமா கொடுத்த ஷாக்!
புதிதாக தோன்றிய கட்சி கடைசியாக தனித்து விடப்படும். நாம் பாஜக கூட்டணி விட்டு வெளியே வந்து விட்டோம். ஆகவே, நாம் மற்றவர்களை இணைத்துக் கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், விஜய்க்கு அது புரியவில்லை. அதன்விளைவாக அவர் வேறு வழியில்லாததால் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்திருக்கிறார்.
இந்த முறையும் திமுக ஆட்சி நீடித்தால் மகன் ஆட்சிக்கு, பேரன் ஆட்சிக்கு வழி வகுத்து விடும் என்று நினைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆகையால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், நான் அந்த கட்சியை சார்ந்தவன் அல்ல. ஆனாலும் அதிமுகவின் பாரட்டத்தக்க அம்சத்தை நான் இங்கே சொல்கிறேன். வக்ஃபு சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு அவர் அமித்ஷாவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார் அந்த ஊக்கம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
பாராளுமன்றத்தில் அவர்கள் வாக்களிக்கின்ற போது அதற்கு முதல் நாள்தான் அமித்ஷாவை சந்திக்கிறார். எங்களுடன் கூட்டணி சேர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார் அமித் ஷா. வேறு வழி இல்லை. திமுகவை அகற்ற வேண்டும் என்றால் யாராவது ஒருவருடன் அவர்கள் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்ற நிலையிலும்கூட, அதிமுகவின் பழைய பாரம்பரிய வழக்கப்படி என்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இசைவாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தம்பிதுரையை விட்டு அங்கே பாராளுமன்றத்தில் தற்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு பாஜகவுடன் கூட்டணி சேருகிறார்கள். ஆகையால், இந்த கொள்கைகளை அவர்கள் காப்பாற்றுகின்ற வகையில் இருக்கிறார்கள்.
வாக்குகள் சிதற விடக்கூடாது என்பதற்காக செய்து கொள்கின்ற ஏற்பாடுகளே தவிர அதிமுக- பாஜகவுடன் கூட்டணி அமைக்க எந்த காரணமும் இல்லை. அதிமுக என்ன நினைக்கிறது என்றால் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கும், மற்றவர்களுக்கும் இணக்கமாக இருந்து வந்தது தொடர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதை காட்டுகின்ற வண்ணமாக ஊக்கமாக வஃக்புக்கு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு பாகஜகவுடன் கூட்டணி சேருகிறார்கள் அல்லது வேறு எவனுடனோ கூட்டணி சேருகிறார்கள். அதனால் என்ன இப்போது?
அவர்களின் கொள்கையை விட்டு விடாத வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தல் அட்ஜஸ்ட்மெண்ட் தானே தவிர வேறொன்றும் இல்லை. ரெண்டு மாதத்திற்கான வாக்கு பிரிந்து விடக்கூடாது என்பதற்கு செய்து கொள்கிற ஏற்பாடுதான் இது. திமுகவை போல் ஐந்து வருடத்திற்கும் தாலி கட்டிக் கொண்டு, ஒவ்வொரு கட்சிக்காரனும் சேர்ந்து கொண்டு ஒத்துழைத்து ஊதிக்கொண்டிருக்கிறார்களே... அது அல்ல அரசியல். தேர்தலின் போது வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதற்கான இட ஒதுக்கீடு தானே தவிர அவர்களது கொள்கை வேறு. தமிழ்நாட்டு மண்ணுக்குரிய எந்த கொள்கையையும் அதிமுக விட்டுவிடவில்லை.
ஹிந்தி கொள்கை, இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கான ஆதரவு எல்லாவற்றிலும் அதே நிலைப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது. ஆகையால் அதிமுக யாருடன் கூட்டு சேர்ந்தாலும் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது'' என பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. அதிமுக - பாஜக கூட்டணியை சிலாகிக்கும் ஜி.கே. வாசன்.!!