“நாங்க ரெடி.. நீங்க ரெடியா” - பாஜகவுக்கு சொடுக்குப் போட்டு சவால் விட்ட எ.வ.வேலு...!
திமுக மீதான ஊழல்குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டால் அதனை எதிர்கொள்ள திமுக தயார் அமைச்சர் எ.வ.வேலு சவால் விட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த மதமான செப்டம்பர் மாதத்தில் தமிழக முதல்வரின் திருகரங்களால் தமிழக முதல்வர் நேரடியாக வந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சிறப்புகள் குறித்தும்பேசினார்.
இதையும் படிங்க: பாஜக-வால் கனிமொழிக்கு கிடைத்த தனி பங்களா… அதிர வைக்கும் ஆதாய லிஸ்ட்.!
பாஜகயுடன் அதிமுக இனி கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் தற்போது கூட்டணி அமைத்துள்ளார்களே என்ற கேள்விக்கு, “அதுகுறித்து நானும் உங்களை மாதிரி டிவியில் தான் பார்த்து தெரிந்து கொண்டேன், இது அவரிடம் தான் கேட்க வேண்டும் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு தற்போது ஏன் கூட்டணிக்கு சென்றார் என்ற விளக்கத்தை அவரிடம் கேளுங்கள் என்றார்.
பாஜக-அதிமுக தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 45 நிமிடம் திமுக அரசு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அமித் ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு, டிவி தொலைக்காட்சிகளில் ஆதாரம் இல்லாமல் வரக்கூடிய செய்திகளுக்கும், அப்படி ஒரு புகார் இருக்குமானால் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்... திமுக அரசு மீது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தமிழக முதல்வர் பின்னால் மக்கள் ஒன்று திரண்டு செல்கிறார்கள் என்ற பொறாமையில் இப்படி பேசுகிறார்கள். இன்னும் தேர்தலுக்கு ஒரு ஆண்டு உள்ளது. அதற்குள் பாஜக அதிமுக கூட்டணி நிலைக்குமா என்பதை பார்ப்போம் என்றார்.
இதையும் படிங்க: பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு தயாராகும் தடபுடல் விருந்து...!