×
 

அடுத்தடுத்து பழுதாகி நின்ற 2 விமானங்கள்.. அவதியில் தத்தளித்து நின்ற பயணிகள்!

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து கிளம்ப இருந்த இரண்டு விமானங்களில் பழுது ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.20 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த vcவிமானத்தில் பயணிக்க வேண்டிய 172 பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர்.

விமானம் ஓடு பாதையில் இருந்து கிளம்பும் முன்பாக, விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் சரியாக இருக்கிறதா என்று விமானி சரி பார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து, பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.  இதனால், அவசர வேலையாக டெல்லிக்கு செல்லவிருந்த பெரும்பாலான பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.

பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கியதும் விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ஏர் இந்தியா சார்பில் பயணிகளுக்கு தரப்பட்ட அறிவிப்பில், விமானத்தை பழுது நீக்குவதற்கு தாமதம் ஆகும் என்பதால் மாலை 4 மணிக்கு மேல் டெல்லிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேலும் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின்னர் அதாவது 5 மணிக்கு இந்த விமானம் டெல்லி புறப்பட்டது.

இதையும் படிங்க: மிளகாய் பொடி தூவி.. மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு.. மாமியாருக்கு மருமகள் போட்ட பக்கா ப்ளான்..!

இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரில் இருந்து 184 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் சிங்கப்பூரில் இயந்திர கோளாறு ஏற்பட்டு மாலை 5.30 மணிக்கு தான் சென்னை வரும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இந்த விமானம் சென்னையில் இருந்து மும்பைக்கு இன்று காலை 11.40 மணிக்கு புறப்பட இருந்தது.

இதனால், அதில் பயணிக்க 167 பேர் காத்திருந்தனர். ஆனால், இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே மும்பை செல்ல வேண்டிய 167 பயணிகள் விமான நிலையத்தில் ஓய்வறைகளில் தவித்துக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்து இயந்திர கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியா முழுவதும் டோல்கேட் கட்டணம் 50% அதிரடியாகக் குறைப்பு... நிதின் கட்கரி மாபெரும் திட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share