×
 

பைலட் இல்லாமல் பறக்கும் கார் தயார்.. இந்தியாவில் சோதனை முயற்சி வெற்றி..!

பைலட் இல்லாமல் பறக்கும் கார் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் சோதனை முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் பைலட் இல்லாமல் இரு நபர்கள் செல்லக்கூடிய பறக்கும் காரை ஆந்திர மாநிலம் குண்டூரில் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார் கேப்சுல் வடிவத்தில் முற்றிலும் பேட்டரியால் இயங்கக்கூடியது. இந்த பறக்கும் கார் மூலம் 40 கி.மீ முதல் 100 கி.மீ தொலைவுவரை, 2ஆயிரம் அடி உயரத்தில் பறக்க முடியும். இந்த பறக்கும் காரை ரிமோட்டிலும், பைலட் மூலமும் இயக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இல்லாமல் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட இந்த பறக்கும் காரின் பரிசோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, பாதுகாப்பாக தரையிறக்ககப்பட்டுள்ளது. இந்த விமானத்தை குண்டூரைச் சேர்ந்த மாக்னம் விங்ஸ் எனும் நிறுவனம் 2017ம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடங்கி இப்போது தயாரித்துள்ளனர். இந்த பறக்கும் கார் புழக்கத்துக்கு வருவதற்கும், வர்த்தகரீதியான ஓட்டதுக்கு வருவதற்கு முன் மத்திய அரசின் ஒப்புதல் தேவை.

இதையும் படிங்க: நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 வரை ஆன்லைன் ரம்மிக்கு NO.. இது ஒழுங்குமுறை அல்ல தடை என வாதம்..!

மாக்னம் விங்ஸ் நிறுவனத்தின் சிஇஓ, நிறுவனர் அபிராம் சாவா கூறுகையில் “அதிகாரிகளின் எங்களின் வி2 வெர்சனை பார்த்து, மனிதர்கள் இல்லாமல் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றிச்செல்ல மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. வி2 பறக்கும் காரில் 2 பேர் பயணி்க்கலாம், 220 கிலோ வரை ஏற்றலாம். மற்றொரு பறக்கும் கார் தயாராகி வருகிறுது அதில் 3 பேர்வரை அமரலாம். 

இந்த பறக்கும் காரை தரையிறக்க 3.5 முதல் 4 மீட்டர் இருந்தாலே போதுமானது. இந்த விமானத்தை இயக்கவும் அடிப்படை விமானப் பயிற்சி சான்று தேவை, ஒருவாரத்தில் இந்த பயிற்சியை முடித்துவிடலாம்.  இந்த சான்றிதழையும் எங்கள் நிறுவனமே பயிற்சிக்குப்பின் வழங்கும் அதன்பின் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி தேவை. 

வி2 விமானத்துக்கு மொத்தம் 8 பேட்டர்கள் தேவை, 8 புரொபெல்லர்கள், 8 மோட்டார்கள், விமானக் கட்டுப்பாட்டு கருவிகள் தேவை. பறந்து கொண்டிருக்கும்போதே 2 அல்லது 3 புரொபெல்லர்கள் பழுதாகிவிட்டாலும் தொடர்ந்து பறக்கும். அவசரநேரத்தில் தரையிறங்க பாரசூட் பொருத்தப்பட்டிருப்பதாலும் அச்சப்படத் தேவையில்லை. இந்த பறக்கும் கார் முற்றிலும் பாதுகாப்பானது, ஒரு காரின் விலையில்தான் அறிமுகமாகும்.

பாரத் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (பி-விடிஓஎல்) தற்போது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆய்வில் இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால், வெர்டிகல் லேண்டிங் சந்தையில் நடைமுறைக்கு வரும். விமானம் பறப்பதற்கு முன், விமானப் போக்குவரத்து துறையில் அனுமதி பெற வேண்டும். பேட்டரில் பறக்கும் விமானம் என்பதால் எந்த இடத்திலும் சார்ஜ் செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீட்ட வாடகைக்கு விட்டு இருக்கீங்களா? வருமான வரித்துறையில் சொல்வது உங்களுக்குதான்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share