×
 

மாணவனை சக மாணவர்களே கடத்தி கொலை செய்த துணிகரம்.. போலீசார் விசாரணை..

ஒன்பதாம் வகுப்பு மாணவனை பணத்துக்காக அவனது நண்பர்களே கடத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவனை அவனது நண்பர்களே கடத்தி அவரது பெற்றோரிடம் 10 லட்சம் தருமாறு தொலைபேசியில் பேரம் பேசியுள்ளனர். மேலும் இது குறித்து போலீசாரிடம் தேர்வு தாள் மகனை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர் போலீஸிடம் ரகசியமாக தகவல் தருவது தன் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள், கடத்திய மாணவனை அடித்து உதைத்து கொலை செய்து  ஏரியில் வீசி சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் 10 வயது சிறுவனை கடத்த முயற்சி.. சுற்றி வளைத்த போலீசார்!

போலீசாரின் நடத்திய அதிரடி விசாரணையில் அவரது சக நண்பர்களே மாணவனை பணத்துக்காக கடத்திச் சென்று பின்னர் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவத்தில் போலீசார் மூன்று மாணவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பணத்துக்காக மட்டும் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் உள் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... கோவை, மதுரை மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share