கங்கை நதி நீர் 50 மடங்கு வேகமாக கிருமிகளைக் கொல்லுமாம்..! இயற்கையாக சுத்திகரிக்கும் என ஆய்வாளர் தகவல்..!
கங்கை நதி நீர் 50 மடங்கு வேகமாக கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்று கூறியுள்ளார் ஆய்வாளர் ஒருவர்.
கங்கை நதி நீர் உலகில் உள்ள மற்ற எந்த நன்னீர் நிதி நீரைவிட 50 மடங்கு வேகமாக பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டது, அது மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து இயற்கையைகவே தன்னை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் அஜெய் சோங்கர் நடத்திய ஆய்வில் கங்கை நதி நீரில் பாக்டீரியாக்களை கொல்லும் 1100 வகையான நுண்ணிய வைரஸ்கள் இருப்பதாகவும் இந்த வைரஸ்கள் பாக்டீரியாக்களை மட்டும கொன்று, நதிநீரை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை,யமுனை நதிகள் பாயும் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 55 கோடி மக்கள் புனித நீராடியுள்ளனர். ஆனால், எந்த நிதி நீர் இதுவரை எந்தவிதமான பாதிப்பையும் அடையவில்லை.
இதையும் படிங்க: அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவீங்களா..? முறியடிப்போம் என வைகோ ஆவேசம்.!
புற்றுநோய், மரபணு, செல் உயிரியியல் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்ற மருத்துவர் சோங்கர். இவர்தான் கங்தை நதி நீர் குறித்து ஆய்வு நடத்தியுள்ளார். அவர் கூற்றுப்படி, “ கங்கை நதிநீரில் இருக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் வைரஸ்கள்தான் கங்கை நதிநீரை பாதுகாக்கின்றன. இந்த பாக்டீரியாக்களை கொல்லும் வைரஸ்கள், மோசமான பாக்டீரியாக்களை அழித்து குளிப்பவர்களை பாதுகாக்கிறது.
இந்த வைரஸ்கள் பாக்டீரியாக்களுக்குள் ஊடுருவி, அதன் ஆர்என்ஏக்களை ஊடுருவி அதேபோல் மாறி அதை அழிக்கின்றன. மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை அழிக்கும்வரை தொடர்ந்து இந்த வைரஸ்கள் தொடருந்து பெருகிக்கொண்டே இருக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும் பாக்டீரியாபேஜ் எனப்படும் வைரஸ்கள் விரைவாக 100 முதல் 300 வைரஸ்களை உருவாக்கிவிடும், தொடர்ந்து நீரை சுத்திகரிக்துக்கொண்டே இருக்கும். கங்கை நதிநீரில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டும் தொடர்ந்து அழித்து, நீரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை இந்த வைரஸ்கள் விட்டுவிடும். மருத்துவப் பயன்பாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் சோங்கரின் அறிக்கை தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், சமீபத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அளித்த அறிக்கையில் கங்கை நதி குளிப்பதற்குகூட தகுதியற்றது, அதில் ஏராளமான மனிதக்கழிவுகளில் இருக்கும் பேக்கல் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருக்கின்றன என அறிக்கை அளித்தது.
இந்த சூழலில் மருத்துவர் சோங்கரின் அறிக்கை அந்த அறிக்கையின் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்தயநாத் கங்கை நதிநீர் மாசு குறித்து வெளியான அறிக்கையை பற்றி கண்டுகொள்ளவில்லை. அதேநேரம், கங்கை நதி நீரில் கோலிஃபார்ம் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் இருக்கிறது, குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றது, மகா கும்பமேளாவை களங்கப்படுத்தும் அறிக்கை என அவர் தெரிவித்திருந்தார்.
பாஜகவின் தகவல்தொழில்நுட்ப தலைவர் அமித் மாளவியா பதிவிட்ட கருத்தில் “ மிகப்பெரிய அறிவியல் வல்லுநர் மருத்துவர் அஜெய் சோங்கர் அறிக்கையின்படி கங்கை நதிநீர் தொடர்ந்து கிருமிகள் இன்றியே இருக்கிறது, 60 கோடி பக்தர்கள் வந்து புனிதநீராடிய பின்பும், இன்னும் பரிசுத்தமாக இருக்கிறது” எனத்தெரிவித்துள்ளார்.
கங்கை நதி நீரில் இருக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் வைரஸ்கள், சூழல் மற்றும் மருத்துவ முக்கியத்துவம் பெறுகின்றன என்று மருத்துவர் சோங்கர் தெரிவித்துள்ளார். நதியின் சுய சுத்தம் செய்யும் செயல்முறையை கடல் சுத்திகரிப்புடன் ஒப்பிட்டு மருத்துவர் சோங்கர் குறிப்பிடுகையில் “ நதி அதன் இருப்பைப் பாதுகாப்பது போல, மனிதகுலம் இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும், அல்லது இயற்கை தன்னை பாதுகாக்க அது சொந்த நடவடிக்கையை எடுக்கும் அபாயத்தை எடுக்க நேரிடும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!