×
 

கூகுள் மேப் பார்த்து காரை தண்டவாளத்தில் விட்ட சம்பவம்.. நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்..!

குடிபோதையில் இருந்த ஒருவர் கூகுள் மேப்பை பார்த்து காரை இயக்கியதில் தண்டவாளத்தில் பாய்ந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

பீகார் மாநிலம், கோபால் கஞ்ச் பகுதியை சேர்ந்த ஆதர்ஷ் ராய் என்பவர் உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் நடந்த தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மது விருந்து வைக்கப்பட்டபோது அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. 

தொடர்ந்து வீடு திரும்புவதற்காக மீண்டும் காரில் வீட்டுக்கு புறப்பட்ட ஆதர்ஷ். ராய் மதுபோதையில் இருந்ததால் அவரது வீட்டிற்கு எந்த வழியாக செல்வது என தெரியாமல் திணறி உள்ளார். அதனால் தனது செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி சொந்த ஊர் பெயரை பதிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: உங்ககிட்ட இந்த ரயில் டிக்கெட் இருக்கா? நீங்கள் ஏசியில் பயணிக்கலாம்.. இந்த டிரிக்ஸ் தெரியுமா?

பின்னர் கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து காரை ஓட்டி சென்ற 1 மணி நேரத்திற்கு பிறகு கார் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து நின்றுள்ளது. அப்போது ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி கார் நிற்பதை கண்ட லோகோ பைலட் அவசர கால பிரேக்கை பயன்படுத்தி 5 கிலோ மீட்டர் தொலைவில் ரயிலை நிறுத்தி உள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை அப்புறப்படுத்தினர். இதனால் ரயில் 57 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். ஆதர்ஷ் ராய் கூகுள் மேப்பில் தனது முழு முகவரியை பதிவு செய்யாமல் நகரத்தின் பெயரை மட்டும் பதிவு செய்ததால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. எந்த ரூட்டில் செல்லப்போகிறது தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share