தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் எதிரொலி.. 10 ஆயிரம் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா..!
தொடர் வலியுறுத்தலின் எதிரொலியாக 10 ஆயிரம் இந்திய இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். ஹஜ் பயணத்திற்கான மண்டல ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவது ஹஜ் பயணிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்றும் 52,500 பேர் மெக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறி இருந்தார்.
எனவே, சவுதி அரேபியா நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் ஜெயந்தி- 2025: பாபா சாகேப் இஸ்லாம் மதத்தை ஏற்காதது ஏன் தெரியுமா..?
தமிழக அரசு வலியுறுத்தலின் எதிரொலியாக மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரிலும் இந்திய இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெக்காவுக்கு புனித பயணம் செல்ல பத்தாயிரம் இந்திய இஸ்லாமியர்களுக்கு சவுதி அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பதவியில் உட்கார வைத்தே பல்லைப் பிடுங்கி விட்டோம்... ஆளுநரின் பதவி நீக்கம்... கொக்கரிக்கும் திமுக..!