அந்த சார் யாருனு தெரிந்தால் ஆட்சி ஆட்டம் காணும் ..பயத்தில் திமுக ..போட்டு தாக்கும் அதிமுக கடம்பூர் செ.ராஜூ!
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பது தெரியும்போது இந்த ஆட்சியே ஆட்டம் காணும் என்பதால் தான் திமுக ஆடிப் போய் உள்ளது எனcகடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் சிதம்பபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டிக்கும் வகையிலும் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் அதிமுக சார்பில் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
பின்னர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்று நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தை உலுக்கிய சம்பவம் தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்திஉள்ளது.திமுக ஆட்சிக்கு வந்தது முதல் வயது வித்தியாசம் பார்க்காமல் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.யார் அந்த சார் என்று கேட்டதும் இந்த அரசுக்கு அச்சம் ஏற்படுகிறது பயப்பிடுகிறது பதட்டப்படுகிறது .
இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புகின்ற போது காங்கிரஸ் கட்சியை வைத்து திசை திருப்ப முயற்சி செய்தனர். ஆளுநர் வெளிநடப்பு செய்து விட்டார் என்றார்.
சட்டமன்றத்தில் படிக்கப்பட்டது ஆளுநர் உரையல்ல சட்டப்பேரவை தலைவர் உரை ஆளுநர் உரை என்பது தமிழகத்தில் பேரவை தலைவர் உரையாக மாறிவிட்டது.அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஆளுநரைக் கண்டித்து திமுக போராட்டம் நடத்துகிறது.
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடும் திமுக , தங்களது 40 எம்பிக்களை வைத்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு அல்லது பிரதமர் இல்லம் முன்பு போராட வேண்டியதுதானே டெல்லியில் போராடாமல் தமிழகத்தில் போராடி என்ன பயன் என்று கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
அதிமுக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் நாங்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டோம் .ஆனால் திமுக போராட்டத்திற்கு காவல்துறை எப்படி அனுமதி அளித்தது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மறைக்கவும் மறக்கவும் செய்ய அரசு முயற்சி செய்கிறது.பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திக்கும்போது ஏன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று சொல்லக்கூடிய திராணி தெம்பு தைரியம் ஏன் முதலமைச்சருக்கு இல்லை என்று விமர்சனம் செய்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுப்பார்.பாஜக திமுக இடையே தான் கள்ள உறவு உள்ளது. தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பது போல காட்டும் திமுக டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை பவியமாக சந்தித்து இணக்கமாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றனர்.
திமுக இருப்பது இண்டியா கூட்டணி - ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட அழைப்பு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இருந்து யார் கள்ளத்தனமாக உறவு வைத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பது தெரியும் வரை பிரச்சனை ஓயாது. யார் அந்த சார் என்பது தெரியும்போது இந்த ஆட்சியே ஆட்டம் காணும் என்பதால் தான் திமுக ஆடிப் போய் உள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி எப்படி...பாமக வழக்கு, விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்
இதையும் படிங்க: ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்.... அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையிலிருந்து காப்பாற்றிய ஆளுநர்...