×
 

பக்கா ப்ளானிங்.. மோடியின் திட்டத்தால் அலறும் நாடுகள்.. பாகிஸ்தானின் முதுகில் குத்திய சீனா..!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் உலக நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட துவங்கி உள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.

அதன் எதிரொலியாக பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது. ராணுவ தளபதி திவேதி ஸ்ரீநகர் சென்று கள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் சின்ஹாவை சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ராணுவம் தயாராக இருப்பதாகவும் கூறினார். பாகிஸ்தான் நாட்டவருக்கான அனைத்து வகை விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் இம்மாத இறுதிக்குள் தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. 

இதையும் படிங்க: ராணுவத்துக்கு 9 மடங்கு அதிகம் செலவிடும் இந்தியா.. பாக்.-ஐ எச்சரித்த ஸ்வீடன் நிறுவனம்..!

இதன் காரணமாக இருநாட்டிற்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எல்லையில் தினம்தோறும் இருநாட்டு ராணுவ வீரர்களிடயே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். 

பாகிஸ்தான் ராணுவத்தில் பல அதிகாரிகள் , வீரர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், 500 ராணுவ வீரர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை ராணுவ தளபதி செய்யது ஹசீம் முனீருக்கு அனுப்பி உள்ளனர். ராணுவ தளபதிகளின் முன்னுக்குப்பின் முரணான உத்தரவுகள், மனஅழுத்தம், மற்றும் பல்வேறு காரணங்களால் ராணுவ வீரர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ராணுவத் தலைமையகம் கடுமையாக எச்சரித்துள்ளது. ராஜினாமா செய்யும் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் அச்சமடைந்து உள்ளது அந்நாட்டில் உள்ள தூதர்களையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தூதர்கள் தங்கள் குடும்பத்தினரை பாகிஸ்தானிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். நட்பு நாடான சீனாவும் பிற நாடுகளுடன் சேர்ந்து இவ்வாறு செயல்பட்டது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானின் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு தனது வான்வெளியை மூடுவது குறித்து இந்தியா இப்போது பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு செய்தால் கோலாலம்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய இடங்களை அணுகுவதற்காக, சீனா அல்லது இலங்கை போன்ற நாடுகளின் வழியாக செல்லும் விமானங்களை பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும். இதனால் பொருட்செலவும், நேரவிரயமும் ஏற்படும். இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களைத் தடை செய்வதும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. 3 முறை அல்லாஹூ அக்பர்.. ஜிப்லைன் ஆபரேட்டர் மீது வலுக்கும் சந்தேகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share