×
 

இந்தியாவில் அதிக வெப்பமான ஆண்டு 2024: மோசமான வானிலைக்கு 3,200 பேர் பலி..

இந்தியாவில் பதிவாகி இருக்கும் அதிக வெப்பமான ஆண்டு, சமீபத்தில் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டு தான். இந்த ஆண்டில் மட்டும் மோசமான வானிலைக்கு 3200 பேர் பலியாகியிருப்பதாக, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆண்டு வானிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.  அதில், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு மிக அதிக அளவில் வெப்பம் பதிவான ஆண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மோசமான வானிலை காரணமாக இடி மின்னலுக்கு 1374 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மழை வெள்ளத்துக்கு 1287 பேர் பலியானதாகவும், வெப்ப அலைக்கு 459 பேர் பலியானதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 3200 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இஸ்ரோவின் புதிய மைல்கல்... செயற்கைக் கோள்களை DOCKING செய்து சாதனை...

இடி, மின்னலுக்கு அதிகமான உயிர்களை பலி கொண்ட இடம் பீகார். அதே நேரத்தில், மழை வெள்ளத்துக்கு அதிக உயிரிழப்புகேரள மாநிலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இரு மாநிலங்களையும் அடுத்து, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மோசமான வானிலைக்கு அதிக உயிர்பலி கொடுத்துள்ளன.

மேலும் கடந்த 1901ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பில்,  2024 ஆம் ஆண்டில் தான் இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டில் அதிக வெப்பம் பதிவாகி இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. 

இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள், உத்தரகாண்ட் ,கிழக்கு மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெற்கு உள்கர்நாடகம், வடக்கு கர்நாடகம், மத்திய மகராஷ்டிரா, ஒடிசா பீகார், ராயல் சீமா கேரளா மற்றும் மாகே பகுதியில் இயல்பை விட கூடுதலாக ஒரு செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி இருக்கிறது. 

மேற்கண்ட தகவல்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு விசுவாசமான எதிர்க்கட்சித் தலைவர் தேவை... ராகுல் காந்தியை பொளக்கும் பாஜக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share