சைபர் மோசடி..! 50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை..!
கர்நாடகாவில், சைபர் குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பயந்து, வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் பல்வேறு சட்டவிரோத சம்பவங்களை செய்ததாக கூறி சில நபர்களை குறி வைத்து பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் உயர் அதிகாரிகள் போல் தங்களை அடையாளப்படுத்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது.
இதுபோல தான். கர்நாடகாவில் நடந்த சைபர் கிரைம் குற்றத்தால் 2 உயிர்கள் பறிபோய் உள்ளன. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கானாபூர் தாலுகாவை சேர்ந்தவர்கள் வயதான தம்பதி சான்டன் நசரேத் - பிளாவியா. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என தெரிகிறது.
இதையும் படிங்க: டிஜிட்டல் அரெஸ்ட்..! முதியவரிடம் 12 லட்சத்தை அபேஸ் செய்த மோசடி கும்பல்..!
இதனிடியே, இருவரும் வீட்டில் கத்தியால் கையை அறுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
மேலும், கணவன், மனைவி இருவரும் கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சில நாட்களுக்கு முன்பு, இந்த வயதான தம்பதியிடம் போனில் பேசிய நபர், தன்னை டெல்லியில் பணிபுரியும் போலீஸ் அதிகாரி சுமித் பிராரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். இவர்களது எண்ணில் இருந்து சட்டவிரோத செயல்கள் நடந்துள்ளதாக கூறி மிரட்டிய நிலையில், அனில் யாதவ் எனும் மற்றொரு நபர் இதே விஷயத்தை பற்றி கூறி, பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால், மனமுடைந்த வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீசார் விசாரணையில் என தெரிய வந்துள்ளது. மேலும், 50 லட்ச ரூபாய் அவர்களிடம் மிரட்டி பறிக்கப்பட்டிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும், ஏமாறும் நபராக பார்த்து இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்துவது நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இதையும் படிங்க: பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மதபோதகர்! லாடம் கட்டிய போலீஸ்..!