×
 

பிரபல மருத்துவமனையில் பில்லி, சூன்யம்? தோண்டத்தோண்ட கிடைத்த எலும்புகள், முடிகள், அரிசி.. 20 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதி மோசடி..!

மும்பையின் புகழ்பெற்ற பிரபல லீலாவதி மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய்க்கு நிதி மோசடி நடந்திருப்பதாகவும், அறங்காவலர் அறையில் பில்லி, சூன்யம் போன்ற நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும் வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனை மிகவும் பிரபலமானது ஆகும். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என மதிப்புமிக்க மனிதர்கள் பலர் இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று கொள்வது வழக்கம். சமீபத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்த நிலையில் அவரும் இதே மருத்துமனையில் தான் சிகிச்சை பெற்று திரும்பினார். அவ்வாறாக மிகவும் புகம்பெற்ற, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த லீலாவதி மருத்துவமனை தான் சமீபகாலமாக நிதி மோசடி புகாரில் சிக்கி உள்ளது. 

நிதி மோசடி புகார் மட்டுமல்லாது, பில்லி, சூன்யம் போன்ற நிகழ்வுகள் இந்த மருத்துவமனையில் நடந்ததாக கூறப்படுவதும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவமனையை கிஷோர் மேத்தா மற்றும் அவரது மனைவி சாரு மேத்தா ஆகியோர் கடந்த 1997ம் ஆண்டு கட்டி முடித்தனர்.

இருப்பினும் 2002ம் ஆண்டு முதல் கிஷோர் மேத்தாவின் உடல் நிலை மோசமானது. இதனால் மருத்துவமனையை அவரது உறவினர்கள் நிர்வாகித்தனர். இவ்வாறு தான் லீலாவதி மருத்துவமனை அவர்களின் பிடிக்குள் சென்றுள்ளது. இந்த மருத்துவமனையை லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளை துவங்கியது. அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒரு பிரியாணிக்காக ரூ.8 லட்சம் செலவு செய்ய பெண்... எல்லாம் கணவனால் வந்த வினை!!

இந்த அறக்கட்டளையில் அறங்காவலர்களாக இருந்தவர்கள் தான், பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதுவரை இந்த அறக்கட்டளைக்கு 7 பேர் அறங்காவலர்களாக இருந்துள்ளனர். தற்போது, மும்பைன் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் அதன் செயல் இயக்குநராக உள்ளார். இவர் பதவியேற்றதும் அறக்கட்டளையில் கணக்கு வழக்குகளை பார்த்துள்ளார். அப்போது தான் கடந்த 2 ஆண்டுகளில் அறக்கட்டளை நிதியில் 1500 கோடி ரூபாய் அளவிற்கு நிதி மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து முதலில் பாந்த்ரா காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்கையில், அவரது புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பரம்வீர் சிங் நீதிமன்றத்தை நாடிஉள்ளார். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பரம்வீர் சிங் அளித்த புகாரில் முன்னாள் அறங்காவலர்கள் ஏழு பேர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் மீது, பிரஷாந்த் கிேஷார் மேத்தா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் அதில் போலியான பில்கள் தயாரித்தும், விழாக்கள் நடத்தியதாக கணக்கு காண்பித்தும், பொருட்கள் வாங்கியதாக கூறியும், 1,250 கோடி ரூபாயை இந்த 17 பேரும் சுருட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த முறைகேடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவந்ததாகவும் கூறி உள்ளார். மேலும் அறங்காவலர்கள் அறைக்கு கீழே பில்லி, சூன்யம் போன்ற செயல்கள் நடந்திருப்பதாகவும் கூறினார். இதன் அடிப்படையில் சாட்சிகள் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்ட போது, உள்ளே 8 மண் கலசங்கள், மனித எலும்பு, முடி, அரிசி போன்ற பொருள்கள் இருந்ததன.

இது பில்லி, சூன்யம் வைத்திருப்பதற்கான ஆதாரம் என அவை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மந்திர, தந்திர வேலைகளை செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என பரம்வீர் சிங் கூறியுள்ளார்.
 

இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமி.. நைசாக பேசி ரூமிற்கு அழைத்து சென்ற கயவன்.. கூட்டு பாலியல் கொடுமை செய்த கும்பல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share