×
 

செந்தில் பாலாஜி ஆதரவில் அடாவடி.. நாமக்கல் மேற்கு திமுக ம.செ மதுரா செந்தில் நீக்கம்..!

திமுகவினர் மதுரா செந்தில் குறித்து திமுக தலைமைக்கு புகார் மேல் புகார் அனுப்பி வந்தனர்.

திமுகவின் நாமக்கல் மேற்கு மாவட்டச்செயலாளராக பணியாற்றி வந்த மதுரா செந்தில் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக  கே.எஸ்.மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக கே.எஸ்.மூர்த்தி  நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்'' எனத் தெரிவித்துள்ளார். தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.மூர்த்திதான்  நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக மதுரா செந்திலுக்கு முன்பே அப்பதவியில் இருந்தார். தற்போது மீண்டும் கே.எஸ்.மூர்த்திக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

                                            கே.எஸ்.மூர்த்தி

 

சாதிய அமைப்பு, அ.தி.மு.க எனப் பயணித்து 2010-ம் ஆண்டில்தான் தி.மு.க-வில் இணைந்தார் மதுரா செந்தில். கட்சியில் இணைந்த 13 ஆண்டுகளில் தி.மு.க மாவட்டச் செயலாளராகிவிட்டார். அதற்கு முக்கியக் காரணம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆசிதான். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த கே.எஸ்.மூர்த்தியை தலைமை மாற்றியது. அவரின் இடத்துக்கு வெப்படை செல்வராஜ்தான் வருவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், செந்தில் பாலாஜி மூலமாக மதுரா செந்தில் காய்நகர்த்தியதால், அவரை மாவட்டச் செயலாளராகவும், வெப்படை செல்வராஜை பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளராகவும் நியமித்தது திமுக தலைமை. 

இதையும் படிங்க: 'இந்தி படித்தவர்களே இங்கு வந்து சித்தாள் வேலை தான் செய்கிறார்கள்...' திமுக எம்.பி,. ஆ.ராசா ஆவேசம்..!

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் மிக முக்கியமான மாவட்டமாக பார்க்கப்படுகிறது. லாரி பாடி கட்டுதல், கோழிப்பண்ணைகள், பள்ளிகள், என ஏராளமான சிறப்புகள் இந்த மாவட்டத்திற்கு உள்ளன. மாவட்ட செயலாளராக பதவியேற்ற மதுரா செந்தில் பதவியேற்ற ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைக்குள்ளாகி வந்தார். அப்போது முதல் திமுகவினர் மதுரா செந்தில் குறித்து திமுக தலைமைக்கு புகார் மேல் புகார் அனுப்பி வந்தனர். அவர் இத்தனை ஆண்டுகளாக அந்தப்பதவியில் தப்பியது பெரிய விஷயம் என்கிறார்கள் அப்பகுதி திமுகவினர்.

                                                          மதுரா செந்தில்

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் அறிவாலயத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், “உங்கள் ஒவ்வொருவர் மீதும் புகார்கள் வந்துகொண்டே யிருக்கின்றன. யாராவது எல்லை மீறியதாகத் தகவல் வந்தால் தென்காசி, நெல்லையில் நடந்ததுதான் அவர்களுக்கும். எனக்கு ஆட்சியைவிடக் கட்சிதான் முக்கியம்” எனப் பொரிந்து தள்ளினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஆனால் அந்தக் கூட்டம் நடந்த மறுநாளிலிருந்தே, நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் மீது புகார் மழை பொழிந்துவந்தனர் தி.மு.க நிர்வாகிகள்.

 

திமுக தலைமை அழைத்து விசாரித்த போது, ''நீங்கள் குறிப்பிடும் அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். என்னுடைய சிறப்பான  செயல்பாடுகளால் பிறர் வயிற்றெரிச்சலில் புகார் சொல்கிறார்கள். சமூகம் சார்ந்தும், மாற்றுக்கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்குமே பொறுப்பு வழங்குகிறேன் என்பதும் தவறான புகார்'' என விளக்கமளித்து வந்தார். இத்தனை புகார்கள் இருந்தும்    இவ்வளவு நாட்களாக அவர் பதவியில் இருந்து தப்பி வந்தது செந்தில்   பாலாஜி ஆதரவாளர் என்கிற ஒரே காரணம் தான். ஆனால். இப்போது திமுக தலைமை மதுரா செந்திலை நீக்கி உள்ளது என்கிறார்கள் நாமக்கல் மாவட்ட திமுகவினர்.

இதையும் படிங்க: அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்... ஓடோடி வந்து விளக்கம் சொன்ன தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share