மாணவர்களே மிஸ் பண்ணிடாதிங்க! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 7) முடிவடைகிறது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி முறையில் நடைபெற உள்ளது. நீட் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சம்... தாயை இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்!!
இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கிய நிலையில், மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 7) நிறைவு பெறுகிறது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற வலைத்தளம் வழியாக உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கெட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைத்து தகவல்களை பெற https://nta.ac.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Daddy_son அந்த நீட் ரகசியத்தை சொல்லுங்க! எதிர்க்கட்சி தலைவர் ஆதங்கம்