×
 

நீட் தேர்வு அச்சம்... தாயை இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்!!

நீட் தேர்வு தோல்வியால் தனது தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான எதிர்ப்புக்கு பிறகும் மத்திய அரசு நீட் தேர்வை நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்த நீட் தேர்வுக்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பௌ தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அனிதா முதல் அண்மையில் திண்டிவனம் மாணவி வரை பலர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துள்ளனர். சில மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆண்டு கணக்கில் தயாராகி மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இந்த சூழலில் ஒரு மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தனது தாயையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் பிரபல நடிகை கைது... உடலில் இத்தனை கிலோவா!!

பாலகாட் மாவட்டம் சிகந்திரா கிராம பஞ்சயாத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர்கள் கிஷோர் மற்றும் பிரதிபா. இவர்களுக்கு  சத்யம் என்ற மகன் உள்ளார்.  சத்யம் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். ஆனால், அவர் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யம் எப்பொழுதும் கையில் செல்போனுடன் இருந்துள்ளார். அதை பார்த்தா பெற்றோர் சத்யனை திட்டியுள்ளனர். படிக்கும்படி கூறியுள்ளனர்.

இதனால் மேலும் மனஉளைச்சலில் இருந்த அவர் செல்போன் நோண்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. செல்போன் பார்ப்பதை தவிர்க்கும்படி அவரது பெற்றோர் திட்டியதால் ஆத்திரம் அடைந்த சத்யம், வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தனது பெற்றோரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பிரதிபா உயிரிழந்துள்ளார். கிஷோர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற மன உளைச்சலே மாணவர் இந்த முடிவை எடுக்க காரணம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஷ ஊசிப்போட்டு காதலியை தீர்த்துக்கட்டிய காதலன்...போலீஸில் சிக்கிய 2 பெண்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share