நெல்லையில் பயங்கரம்.. சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்..!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்கள் அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் சின்னதுரை மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதி அருகே சின்னதுரையை வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சின்னதுரைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையாளர் சாந்தா ராம், உதவி ஆணையர் சுரேஷ் சின்னதுரையை நேரில் சந்தித்து தாக்குல் பற்றி கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டோமா..? - பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கும் மருமகன் குடும்பத்தார்..!
Grindr செயலி மூலம் சின்னதுரையிடம் பழகி, அவரை ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்து தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவர் சின்னதுரை சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை.. சில்மிஷம் செய்த கண்டக்டர்.. ஐ.டி பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்..!