×
 

லாலு பிரசாத்தின் கூட்டணி அழைப்பை நிராகரித்தார், நிதிஷ் குமார்; "2 முறை செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம்"

பீகார் மாநிலத்தில் கூட்டணி அமைப்பதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிடித்திருந்தஅழைப்பை முதல் அமைச்சர் நிதிஷ்குமார் நிராகரித்து விட்டார்.

இரண்டு முறை செய்த தவறை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம் என்றும் அதற்கான காரணம் குறித்து அவர் விளக்கி இருக்கிறார். பீகார் மாநிலத்தில்  லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் "மெகா கூட்டணி"யில் அங்கம் வகித்தது.  பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்தார். தற்போது லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில்நிகழ்ச்சி ஒன்றில் லாலு பிரசாத் பேசுகையில், "கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாகவும், முந்தைய கசப்பு உணர்வுகளை மறந்து நிதிஷ் குமார் மெகா கூட்டணியில் இணைய வேண்டும்" எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: பாஜகவில் அதிகரிக்கும் பெண் தலைவர்கள்..! படை திரட்டி கெத்து காட்டிய தமிழிசை..!

அதைத்தொடர்ந்து முசாபர்பூரில், ரூ. 450 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, முதல் அமைச்சர்நிதிஷ் குமாரிடம், கூட்டணிக்கு லாலு அழைப்பு விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்., அதற்கு பதில் அளித்துஅவர் கூறியதாவது:-

"அவர்களுடன் (லாலு பிரசாத்) நான் ஏற்கெனவே இரண்டு முறை கூட்டணி அமைத்து தவறிழைத்து விட்டேன். மீண்டும் அதேபோன்ற தவறை செய்யமாட்டேன்.

நமக்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு ஏதாவது செய்தார்களா? சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சினர். அப்போதைய ஆட்சியின்போது தவறுதலாக இரண்டு முறை அவர்களுடன் கூட்டு சேர்ந்துவிட்டேன். மீண்டும் அதுபோன்று நடக்காது.

அப்போது பெண்களின் நிலை எப்படி இருந்தது? இப்போது நமது சுய உதவி குழுக்கள் திட்டத்தை ( ஜீவிகா) மத்திய அரசு நகலெடுக்கிறது. இவ்வளவு நம்பிக்கையான கிராமப்புற பெண்களை நீங்கள் இதற்கு முன்பு பார்த்தது உண்டா?" இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகாரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் நிறுத்தப்படுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார். பீகார் மாநில பாரதிய ஜனதா தலைவர்களும் இந்த முடிவை ஆதரித்தனர். இந்த நிலையில் தான் லாலு பிரசாத் யாதவ் நிதிஷ் குமாருக்கு கூட்டணிக்கான அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாலுவின் மகன், தேஜஸ்வி நம்பிக்கை.

இதையும் படிங்க: ஆளுநர் வெளிநடப்பு மடைமாற்றம் செய்ய நடத்தப்பட்டதா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share