×
 

ராஜ் தாக்கரே-உத்தவ் தாக்கரே இடையே அரசியல் கூட்டணியா..? சஞ்சய் ராவத் விளக்கம்..!

ராஜ் தாக்கரே-உத்தவ் தாக்கரே இடையே எந்த அரசியல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று சிவசேனா உத்தவ் கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, சிவசேனா உத்தவ்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இடையே எந்த அரசியல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை இது உணர்ச்சிவசப்பட்ட பேச்சு மட்டும்தான் என்று சிவசேனா உத்தவ் கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்று ஆளும் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகவும், மராத்திய மக்களின் நலனையும், மொழியையும் காக்கும் பொருட்டு, 20 ஆண்டுகளுக்குப்பின் நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்ரேவும், சிவேசனா உத்தவ் கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவும் இணைய  உள்ளனர்.

இதையும் படிங்க: ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இணைந்தால் வரவேற்பேன்.. சுப்ரியா சுலே மகிழ்ச்சி..!

இது தொடர்பாக இருவரும் தங்களின் விருப்பத்தையும், கருத்துக்களையும் பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர். தங்களுக்குள் இருக்கும் சிறு சண்டைகளை மறந்து, மராத்திய மக்களின் நலனுக்காக, மொழித்திணப்பை எதிர்த்தும் இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து சிவசேனா உத்தவ் கட்சியின் மக்களவை எம்.பி சஞ்சய் ராவத் அளித்த பேட்டியி்ல் கூறியதாவது: ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இடையே நடந்தது உணர்ச்சிப்பூர்வான பேச்சு மட்டும்தான் போனது. அரசியல் பூர்வமாக எந்தக் கூட்டணியும் உருவாகவில்லை. அதேநேரம் எதிர்காலத்தில் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி உருவாகாது என்று முழுமையாக மறுக்கமுடியாது. 

ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இருவரும் சகோதரர்கல். பல ஆண்டுகளாக ஒன்றாக, ஒற்றுமையாக அரசியல் களத்தில் இருந்தனர். எங்களின் உறவு ஏதும் முறியவில்லை. உறவை நீட்டிப்பது குறித்து சகோதரர்கள் முடிவு செய்வார்கள். உத்தவ் ஜி கூறியதை நாங்கள் ஏற்கிறோம். மகாராஷ்டிராவுக்காக தேவைப்பட்டால் நாங்கள் ஒன்றாக இணைகிறோம்.

எந்த கட்சிகள் மகாராஷ்டிராவின் நலன்விரும்பிகள் என்று கூறுகிறதோ அந்தக் கட்சிதான் மகாரஷ்டிராவின் எதிரி. பால் தாக்கரேயின் சிவசேனாவை உடைத்துவிட்டனர், மகாரஷ்டிராவின் பெருமைமீது தாக்குதல் நடத்தினர். அதுபோன்ற கட்சியுடன் எப்போதும் உறவு இல்லை. எங்களின் உறவு உண்மையான மகாராஷ்டிரா மக்களுடன்தான்.இது எங்கள் நிபந்தனை அல்ல, மகாராஷ்டிரா மக்களின் உணர்வு”

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இணைந்தால் வரவேற்பேன்.. சுப்ரியா சுலே மகிழ்ச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share