7 வயது பேரனை ரூ.200க்கு விற்ற பாட்டி.. காரணத்தை கேட்டதும் கலங்கிய போலீசார்..!
ஒடிசாவில் 7 வயது பேரனை மூதாட்டி ஒருவர் ரூ.200க்கு விற்றதாக வெளியான தகவலை அடுத்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். பேரனை மீட்டு குழந்தைகள் நல மையத்தில் சேர்த்தனர்.
ஒடிசா மாநிலம் பாட்லியா கிராமத்தை சேர்ந்த சிறுவன் மந்த் சோரன். 7 வயதான இந்த சிறுவனின் வாழ்வில் எண்ணற்ற சோகங்கள் இழையோடியது. இவனது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு காணமல் போனார். தந்தை இல்லாத நிலையில் தாயுடன் தனிமையில் வசிந்து வந்துள்ளான் மந்த் சோரன். ஆனால் உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா இந்த சிறுவனது வாழ்விலும் தனது கோர முகத்தை காட்டி சென்றது.
கொரோனாவின் கோர பிடியில் சிக்கி, இந்த சிறுவனது தாயும் இறந்து போனார். எங்கே போவது? யாரை சேர்வது? என திக்கு தெரியாத நிலையில் திரிந்த இந்த சிறுவனை, அவனது பாட்டி தன்னுடனே அழைத்து சென்றுள்ளார். பாட்டியின் அரவனைப்பில் மந்த் சோரன் சிறிது காலம் நிம்மதியாய் இருந்தான். வயிற்று பசி இருந்தாலும் வழி துணையாக பாட்டி இருந்தாள். ஆனால் வயது மூப்பு காரணமாக மூதாட்டியால் பேரன் மந்த் சோரனை கவனிக்க முடியவில்லை.
தள்ளாத வயதில் அந்த மூதாட்டியால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால் உணவுக்கு இருவரும் என்ன செய்வதென்று கண் கலங்கினர். இதனால் மூதாட்டி சோரன் ராய்பால் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு சில காலம் பேரனும், பாட்டியும் தங்கி இருந்தனர். அங்கு பாட்டியின் உடல்நிலை மோசமடைந்தது. ஏற்கனவே பண கஷ்டத்தில் இருந்த பாட்டியின் சகோதரி குடும்பத்தினரும் இவர்கள் இருவரையும் சுமையாக பார்க்க துவங்கினர்.
இது பேரனுக்கு புரிந்ததோ இல்லையோ, பாட்டிக்கு புரிந்தது. தன்மானம் தடுத்த பிறகு அங்க தங்க விரும்பவில்லை பாட்டி. பாட்டி, பேரன் இருவரையும் பராமரிக்க அவர்கள் சிரமப்பட்டது பாட்டி நன்றாக உணர்ந்தாள். அதன் பின்னர் மூதாட்டி தனது பேரனுடன் சகோதரி வீட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் வசித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: வெற்றிகரமாக நிகழ்ந்த தேஜஸ் போர் விமான சோதனை! துல்லியமாக தாக்கி அழித்த ஆஸ்ட்ரோ
ப்ளாட்பாரம் வாழ்க்கை தான் தனக்கு என்றான பின்னும் பாட்டி தன்னுடனே பேரனை வைத்து பார்த்துக் கொண்டாள். ஆனால் தொடர்ந்து வறுமையில் வாடிய அந்த மூதாட்டி தனது பேரனை கவனித்துக் கொள்ள முடியாமல் போனது. வயது மூப்பு காரணமாக தன்னையே அந்த மூதாட்டியால் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில் அந்த மூதாட்டி தன்னுடைய பேரனை ரூ.200 விற்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.
விசாரனையில் அந்த மூதாட்டி நிதி ஆதாயத்திற்காக பேரனை விற்கவில்லை. பாட்டியால் பேரனைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை, உணவளிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. இவரிடம் அடையாளம் தெரியாத ஒரு தம்பதியினர் அவரது பேரனுக்கு உணவு, தங்குமிடம் கொடுப்பதோடு அந்த சிறுவனைப் படிக்க வைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். இதனை நம்பி அந்த தம்பதியரிடம் தனது பேரனை மூதாட்டி ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த பாட்டி கூறிய அடையாளங்களை வைத்து விசாரணை போலீசார் மேற்கொண்டனர். இதனையடுத்து 7 வயது சிறுவன் மீட்கப்பட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டான்.
இதையும் படிங்க: தெருநாய் கடித்ததால் விபரீத முடிவு? நாய் போல் குரைத்ததால் மன உளைச்சல்.. அரசு மருத்துமனையில் நடந்த பகீர் சம்பவம்..