×
 

தேச துரோகிகள்! பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய வஞ்சகர்கள்.. பெயர், விவரங்கள் அறிவிப்பு..!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை குறிவைத்து, உளவுத்துறை நிறுவனங்கள் தயாரித்த பயங்கரவாதிகளின் 14 பேர் பெயர் பட்டியலை உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதுகுறித்த வழக்கு ஆவணங்கள், எப்.ஐ.ஆர்., நகல் ஆகியவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவங்கினர்.

பைசரன் பசுமை பள்ளத்தாக்கின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சல்லடை போட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் நொடிக்கு நொடி விவரிக்கும்படி கூறி, பயங்கரவாதிகளின் திட்டத்தை முழுமையாக உள்வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை குறிவைத்து, உளவுத்துறை நிறுவனங்கள் தயாரித்த பயங்கரவாதிகளின் 14 பேர் பெயர் பட்டியலை உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க: தாக்குதல் இப்படித்தான் நடந்தது! என்.ஐ.ஏ விசாரணையில் வெளிவந்த உண்மை.. ரீல்ஸ் எடுத்தவரின் வாக்குமூலம்!!

அடில் ரெஹ்மான் டென்டூ (21), ஆசிப் அகமது ஷேக் (28), அஹ்சன் அகமது ஷேக் (23), ஹாரிஸ் நசீர் (20), ஆமிர் நசீர் வானி (20), யாவர் அகமது பட் (28), ஆசிப் அகமது காண்டே (24) நசீர் அகமது வானி (21). ஷாஹித் அகமது குட்டாய் (27), ஆமிர் அகமது தர் (32), அட்னான் சபி தார் (35) ஜுபைர் அகமது வானி (39) ஹாரூன் ரஷீத் கனாய் (32), ஜாகிர் அகமது கனி (29). இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் ஜம்மு காஷ்மீரில் தங்கி, பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. 

இதில் ஏற்கனவே  ஐந்து பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. பஹல்காமில் நடந்த கொலைவெறி தாக்குதலில் முக்கிய பங்காற்றியவன், அடில் ஹுசைன் தோக்கர். இவன் காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் மாவட்டம் குரீ கிராமத்தை சேர்ந்தவன். பஹல்காமில் ராணுவ உடையில் வந்து சுற்றுலா பயணியரை கொன்றவர்களில் அடில் ஹுசைன் தோக்கரும் ஒருவன் என கண்டறிப்பட்டுள்ளதால், ராணுவம் குரீ கிராமத்தில் உள்ள அவனது வீட்டை, இடித்து தரைமட்டமாக்கியது. அங்கு வசித்து வந்த தாய் ஷாஜதா பானுவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் ஒப்படைத்தனர்.

எனது மகன் இதுபோன்ற படுபாதக செயலில் ஈடுபடுவான் என, சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன் இந்த கொடுஞ்செயலை செய்திருந்தால், அதற்கான தண்டனையை நிச்சயம் வழங்க வேண்டும். மகனே, நீ எங்கிருந்தாலும் சரணடைந்து விடு; நாங்களாவது நிம்மதியா வாழ்கிறோம் என அவனது தாய் கண்ணீர் மல்க கூறினார். அடில் ஹுசைன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாக். கட்டாயம் அனுபவிக்கும்.. தூங்குகிற புலியை இடரினால் இதுதான் கதி.. மதுரை ஆதினம் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share