இந்தியாவுடன் போர் வேண்டாம் - பாகிஸ்தான் பிரதமருக்கு பிக் பிரதர் அட்வைஸ்!
இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவுடன் போர் தொடுக்காமல் இருப்பது நல்லது' என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்-க்கு அவருடைய அண்ணனும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போர் சூழ்நிலை:
பஹல்காமில் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மத்திய அரசின் அணுகுமுறையால் பாகிஸ்தானில் பீதி நிலவுகிறது. இப்போது பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் சொந்த உறவினர்கள் கூட இந்தியாவுடன் போருக்குச் செல்ல வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ராணுவம் குறித்து பொய் தகவல்... இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வு..!
பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இந்தக் கொடூரமான படுகொலைக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன. 130க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் உயர்மட்டத் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளன.
அதிகரிக்கும் பதற்றம்:
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவமும் PoK-வில் தனது நடமாட்டத்தை அதிகரித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபிற்கு அவரது மூத்த சகோதரரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் ஒரு பெரிய அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவுடன் போர் தொடுக்க வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கங்கள் என்றும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்-க்கு அவரது மூத்த சகோதரரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தேசிய பாதுகாப்புக் குழுவின் முடிவுகள் குறித்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நவாஸ் ஷெரீப்பிடம் தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவுடன் போருக்குச் செல்ல வேண்டாம் என்றும், இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைக்க முயற்சிக்கும் படியும் தெரிவித்துள்ளார்.
நவாஸின் அறிவுரை:
இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவுறுத்தியுள்ளார். மூன்று முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் மூத்த சகோதரர் ஆவார். பாகிஸ்தானின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான நவாஸ், தனது சகோதரரும் பிரதமருமான ஷாபாஸிடம், இந்தியாவுடன் போரை நோக்கி நகர வேண்டாம் என்றும், ராஜதந்திர முறைகளை பின்பற்றுவதன் மூலம் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாகப் பேசுவதற்கு மத்தியில், நவாஸ் ஷெரீப் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: சீறிப்பாய்ந்த ஏவுகணை..! 100 சதவீதம் தயார் நிலையில் இந்தியா..!