×
 

உளறிக் கொட்டிய கவாஜா.. ஐ.நா சபையில் வச்சு செஞ்ச இந்தியா.. அனல் பறக்கும் பேச்சு..!

உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு பாகிஸ்தான் என ஐ.நா சபையில் இந்தியா இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் ஆவேசமாக தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடா்ந்து, எல்லைகள் மூடல், அந்நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடா்பான காணொலிகள் மற்றும் புகைப்படங்களை பாதுகாப்புப் படையினா் ஆராய்ந்தபோது, பயங்கரவாதிகளின் கைகளில் அமெரிக்க தயாரிப்பு அதிநவீன இயந்திர துப்பாக்கிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆதரவளித்து வருவதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊட்டி வளர்க்கிறது. அவர்களை இந்தியாவுக்குள் உருவுருவ செய்து நாசகர வேலைகளை செய்வதாக இந்தியா எப்போதும் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஒருபோதும் பாகிஸ்தான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது இல்லை. செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பேசி இருப்பது இந்தியாவின் குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதாக உள்ளது. 

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி? ராணுவ தளவாடங்களுடன் போர் விமானங்கள் தரையிறக்கம்..!

பாகிஸ்தானிலிருந்த வெளியாகும் ஸ்கை நியூஸ் தொலைகாட்சி சேனலில் நேரலை கலந்துரையாடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்றார். இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக, அந் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் ஒரு பகுதியாகவே பாகிஸ்தான் மேற்கொண்டு வந்துள்ளது என்றும் கூறினார். 

மேலும் சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரின்போது, அமெரிக்காவை பாகிஸ்தான் ஆதரித்தது. மேலும், 2001 செப்டம்பர் 11ல் நியூயார்க்கில் அல்கொய்தா நடத்திய பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அதன் படையெடுப்பையும் பாகிஸ்தான் ஆதரித்தது என்றார். இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையானது. இது குறித்து ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் கூறியதாவது: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்து ஆதரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்ததை ஒப்புக்கொண்டதை உலகம் முழுவதும் மக்கள் கேட்டுள்ளனர். 2008ல் நடந்த பயங்கரமான 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறந்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து, உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் அளித்த ஆதரவையும், ஒற்றுமையையும் பாராட்டுகிறோம். இது பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதற்கு சான்றாகும். பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார். 

இதையும் படிங்க: பயங்கரவாதிகள் ஆயுதக் குழுக்களா..? பிபிசி கருத்துக்கு மத்திய அரசு அதிருப்தி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share