×
 

பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி? ராணுவ தளவாடங்களுடன் போர் விமானங்கள் தரையிறக்கம்..!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக துருக்கி அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி இந்திய ராணுவனத்தினர் போல் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்ற உள்ளது.

இந்த பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அதிரடி முடிவுகள் வெளியாகியது. சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடுவதை இந்தியா நிறுத்தி உள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை நிறுத்தும்வரை இந்தியா தண்ணீர் தராது என்றும் அறிவித்துள்ளது.இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பயங்கரவாதிகள் ஆயுதக் குழுக்களா..? பிபிசி கருத்துக்கு மத்திய அரசு அதிருப்தி..!

இந்தியா பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 2 நாடுகளின் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் அஞ்சி நடுங்கிக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில் நம் நாட்டின் லடாக்கை ஒட்டியுள்ள பென்சி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஸ்கார்டு, கைபர் பக்துங்வாவின் ஸ்வாட் என எல்லையில் உள்ள விமானப்படை தளங்களில், எப் -16, ஜே -10, ஜேஎப் - 17 ஆகிய ரகங்களைச் சேர்ந்த போர் விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. குறிப்பாக, ஸ்கார்டு விமானத் தளத்தில் கூடுதல் போர் விமானங்களையும், ராணுவ தளவாடங்களையும் இறக்கும் வகையில், ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, ராணுவ ரீதியாக சீனா உதவுகிறது. பாகிஸ்தான், சீனா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் வலுவான பாதுகாப்பு உடன்படிக்கை செய்துள்ளன. அதன்படி, துருக்கியும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை வழங்கி வருகிறது. பாகிஸ்தான் கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு நேற்று முன்தினம் துருக்கி விமானப்படைக்கு சொந்தமான 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானம் சென்றது. அதில், ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

இதுபோல, இஸ்லாமாபாத் விமானப்படை தளத்துக்கும், ஆறு 'சி -130 ஹெர்குலிஸ்' ரக போர் விமானங்களை துருக்கி நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.போர் விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தபோதிலும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட ராணுவ தளவாடங்கள் பற்றிய விபரங்களை வெளியிடவில்லை.

இதையும் படிங்க: தேச துரோகிகள்! பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய வஞ்சகர்கள்.. பெயர், விவரங்கள் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share