×
 

சொல்லி அடிக்கும் இந்தியா..! பாக். எக்ஸ் கணக்கு முடக்கம்.. மத்திய அரசு அதிரடி..!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தை மத்திய அரசு முடக்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி பல உயிர்களைக் கொன்று குவித்தனர். உலக நாடுகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தான் மீது இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இனிமேல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவிற்குள் பாகிஸ்தானியர்கள் நுழைய இனி விசா வழங்கப்படாது என்றும் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி; காஷ்மீர் பண்டிட்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு! 

தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தை மத்திய அரசு முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு மத்திய அரசு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் தூதரக உறவு உட்பட அனைத்தும் முறிவு... மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப்பின் முடிவு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share