×
 

இனி பணம் எடுக்க இறங்க வேண்டாம்..! வருகிறது எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி..!

எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் எந்திரங்களை நிறுவி, பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர பரிசோதனை முயற்சியை ரயில்வே செய்துள்ளது.

இனிமேல் அவசரத் தேவைக்கு பயணத்தின் போது பணம் எடுக்க ரயில் நிலையத்தில் உள்ள ஏடிஎம்களைத் தேடி அலையத் தேவையில்லை. பயணிகளுக்கு உதவும் வகையில் ரயிலிலேயே ஏடிஎம் எந்திரத்தை நிறுவி  பயன்பாட்டுக்கு ரயில்வே கொண்டுவர உள்ளது. முதல்கட்டமாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் எந்திரங்களை நிறுவி, பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர பரிசோதனை முயற்சியை ரயில்வே செய்துள்ளது.

பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை முயற்சியாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஏடிஎம் எந்திரங்களை நிறுவி ரயில்வே துறை பரிசோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: இது எப்படி இருக்கு..! ஏடிஎம்களில் பணம் எடுத்த மக்கள்.. கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய 3 வங்கிகள்..!

இது குறித்து மத்திய ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “புஷாவல் மண்டலத்தில் முதல் கட்டமாக பயணிகளின் வசதிக்காக பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் எந்திரத்தை ரயில்வே பரிசோதனை முயற்சியாக செய்துள்ளது. இந்த ஏடிஎம் எந்திரத்தின் மூலம் ரயில்வே துறை எந்த வருவாயையும் ஈட்டாது, முற்றிலும் பயணிகளின் நலனுக்காகவே இதைச் செய்துள்ளது. இதற்காக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியுடன் பேச்சு நடத்தி முதல் கட்டமாக ஏடிஎம் எந்திரத்தை நிறுவியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மன்மத்-மும்பை சிஎஸ்டே ரயில்வே நிலையத்துக்கு இடையே இந்த பஞ்சவதி எஸ்க்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயிலில்தான் ஏடிஎம் எந்திரம் வசதி செய்யப்பட்டு பயணிகளிடமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரயலில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இடத்தில் இந்த ஏடிஎம் வசதி செய்யப்பட்டுள்ளது. 

பயணிகளுக்கு எந்தவிதமான அசவுகரியமும் இல்லாத இடத்தில் இந்த ஏடிஎம் வசதி செய்யப்படுள்ளது. பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலி்ல் 22 பெட்டிகள், 2016 பயணிகள் இருந்தனர். மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும் உதவுவதற்காகவும் ஏடிஎம் வசதி செய்யப்பட்டுள்ளது.ரயில் பயணிக்கும் போது பயணிகள் பணம் எடுக்க நேர்ந்தால் நெட்வொர்க் சிறப்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனைவியை மகிழ்விக்க ஆசை.. ஏடிஎம்-ஐ உடைத்த கணவன்.. போதை ஆசாமியை பொளந்த போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share