பாமக சித்திரை முழு நிலவு மாநாடு..! திருமாவளவனுக்கு அழைப்பு..!
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாமக சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. அதனை ஒட்டி முகூர்த்த பந்த கால் நடும் விழா நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பந்தல்கால் நட்டனர். இந்த மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அன்புமணி கூறியிருந்தார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பாமக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சமூக மக்களும் மாநாட்டில் பங்கேற்க வேண்டும், அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிஜேபியோட கூட்டணி வச்சா இபிஎஸ் கதை அவ்ளோ தான்.. திருமா கணிப்பு..!
திருமாவளவனை நேரில் சென்று சந்தித்த பாமகவினர் மாநாட்டிற்கான அழைப்பிதழை கொடுத்ததுடன் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதனை அடுத்து இன்முகத்தோடு அழைப்பிதழை திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: திருமாவை விடுங்க.. என் எதிரியை நான் கருவில் இருக்கும்போதே தீர்மானித்து விட்டேன்- சீமான் திட்டவட்டம்..!