×
 

குழந்தைக்கு நீ அப்பா கிடையாது! வெளியே சொன்னா கொன்னுருவேன்.. கணவனை மிரட்டிய மனைவி..!

உத்தரபிரதேசத்தில் வேறு ஒரு நபரால் கர்ப்பம் தரித்த இளம்பெண் ஒருவர், தன்னையும், தன் குழந்தையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாகவும், வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்க வைத்துவிடுவேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவருக்கும் சந்த் கபீர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 2022-ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் ட்திருமணமானதில் இருந்தே மன பொருத்தம் இல்லாமல் இருந்தது. ஜோதா தனது கணவரை நெருங்க விடாமல், தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் உடல் ரீதியான உறவு இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் கணவர் பிரதாப் புலம்பி தவித்துள்ளார். இதன் காரணமாகவே கணவன், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். பெற்றோர் பெரியோர் சமாதானப் படுத்தியும் தகராறு தீரவில்லை. தகராறு காரணமாக அடிக்கடி தாய் வீட்டுக்கு மனைவி ஜோதா சென்று விடுவது வழக்கம்.

அதுபோலவே கடந்தாண்டு நவம்பரில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி ஜோதா, அதன் பிறகு திரும்பி வரவில்லை. கணவர் நேரில் சென்று வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது ஏப்ரலில் வருவதாக மனைவி கூறினார். சண்டையிட்டு அழைத்து பார்த்தும் மனைவி ஜோதா மனம் மாறாததல், கணவர் பிரதாப் வேறு வழியின்றி தனியாக வீடு திரும்பினார்.

அதன் பிறகு ஏப்ரலில் ஜோதா திரும்பவும் வீட்டிற்கும் வந்துள்ளார். ஆனால் திரும்ப வந்ததில் இருந்து மீண்டும் ஜோதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மனைவி ஜோதாவுக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால், கணவர் பிரதாப் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

இதையும் படிங்க: அய்யோ என் புருஷனை பாம்பு கடிச்சிருச்சே! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி.. காதலன் கொடுத்த ஐடியா புஷ்ஷ்..!

அங்குதான் கணவர் பிரதாப்புக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் மனைவி ஜோதா 14 வார கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். 'என்னது கர்ப்பமா?' என ஷாக்கான கணவர் பிரதாப் குழம்பினார். உடல் ரீதியான உறவு ஏதுவுமே இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என மறுத்துள்ளார். நம்ப முடியாமல் வேறு சில மருத்துவ மனைகளுக்கும் அழைத்துச் சென்றபோது, அங்கும் கர்ப்பம் உறுதியானது. ஆவேசமடைந்த கணவர் பிரதாப், மனைவி ஜோதாவிடம் விசாரித்தபோது, தகராறு ஏற்பட்டது. 

ஒரு கட்டத்தில் தகராறு முற்றியபோது, ஆமாம், வேறு ஒருவரால் தான் கர்ப்பமாக இருக்கிறேன். அதற்கென்ன? என்னையும் பிறக்கப்போகும் குழந்தையையும் ஏற்காவிட்டால், உன்னை கொன்று விடுவேன். வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக போலீசில் புகார் அளிப்பேன் என மனைவி ஜோதா கூறியதால், கணவர் பிரதாப் கடும் அதிர்ச்சியடைந்தார்.

மஹராஜ்கஞ்ச் போலீஸ் ஸ்டேசனில், அவர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலின சமத்துவ சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் இது. தலைவிதி இதுதான் என சமாதானமாகி மனைவியையும் குழந்தையையும் ஏற்பதைத் தவிர, அவருக்கு நம் நாட்டு சட்டப்படி வேறு வழியில்லை என, சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இத பிடிச்சா சளி சரியாபோயிடும்.? சிறுவனுக்கு சிகரெட் கொடுத்த டாக்டர்.. வீடியோவால் வந்த சிக்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share