×
 

பிரதமர் மோடிக்கு மகுடம் சூட்டிய மொரீஷியஸ்..! உயரிய விருதை அறிவித்து மரியாதை..!

பிரதமர் மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். 

இந்த நிலையில், மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருதை, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அந்நாட்டின் பிரதமர் நவீன் ராமகூலம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அட்ராசக்க..! பிரதமரின் எக்ஸ் பக்கத்தை கையாளும் தமிழக செஸ் வீராங்கனை..!

மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, 'THE GRAND COMMANDER OF THE ORDER OF THE STAR and KEY OF THE INDIAN OCEAN' என்ற விருது, பிரதமர் மோடிக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, மொரீஷியஸ் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஆற்றிய பெரும் பங்குக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மோடி. மேலும், இந்த விருதைப் பெறும் ஐந்தாவது உலகத் தலைவர். மேலும், பிரதமர் மோடி, 21வது சர்வதேச கவுரவ விருதைப் பெற உள்ளார்.

இதனிடையே, போர்ட் லூயிஸில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையிலான உறவுக்கு கிடைத்த மரியாதையாக இந்த விருதை கருதுவதாகவும் மொரிஷியஸ் நாட்டில் ஒரு மினி இந்தியா வாழ்வதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

முன்னதாக மகா கும்பமேளா புனித நீரை மொரீசியஸ் அதிபருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். மொரீஷியஸின் பல குடும்பங்களால் கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர்களின் உணர்வுகளைப் பற்றி, தான் கவலைப்பட்டதாகவும் தெரிவித்தார். எனவே, கும்பமேளா புனித நீரை கங்கை தாலாவ் ஏரியில் கலக்க உள்ளதாக கூறிய பிரதமர், கங்கை அன்னையின் அருளால் மொரீஷியஸ் புதிய செழிப்பை அடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்.

 

இதையும் படிங்க: எல்லாமே பெண்கள் தான்..! பிரதமர் நிகழ்ச்சியில் ட்விஸ்ட் வைத்த குஜராத் போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share