×
 

மீண்டும் தலைதூக்கும் ராகிங்..! 3 ஆண்டுகளில் 51 பேர் மரணம்.. தேசிய அளவில் வெளியான புள்ளி விவரம்..!

கல்லூரிகளில் ராகிங் கொடுமை அதிகரித்து வருவதால் கடந்த 3 ஆண்டுகளில் 51 பேர் மரணம் அடைந்திருப்பதாக சேவ் அமைப்பு அதிர்ச்சிகரமான டேட்டாவை வெளியிட்டுள்ளது.

இந்தியா உலக நாடுகளுக்கு இணையாக அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது. கல்வி, தொழில்நுட்பம் என சகல விதத்திலும் இந்திய வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால் சமீப காலமாக கல்வி நிறுவனங்களில் நடக்கும் ராகிங் குறித்த புகார்கள் பெற்றோரை கலக்கமடைய செய்துள்ளன. சமீபத்தில் கேரளாவில் ஜூனியர் மாணவர் ஒருவரை 10க்கும் மேற்பட்ட சீனியர் மாணவர்கள் சேர்ந்து தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு சில மாணவர்கள் இந்த ராகிங் கொடுமைக்கு பயந்து உயிரையும் மாய்த்துக் கொள்ள துணிகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 51 ராகிங் மரணங்கள் நடந்துள்ளதாக  கல்விச் சமூகத்துக்கு எதிரான வன்முறை (சேவ்) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ராகிங் கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

அதன்படி, தேசிய அளவில் ராகிக் கொடுமைக்கு எதிரான உதவி எண்ணில் 3 ஆயிரத்து 156 புகார்கள் பதிவாகி உள்ளதாகவும் 1,946 கல்லூரிகள் இந்த புகார்களில் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் சேவ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரில் தொடர்புடைய கல்லுரிகள் பெரும்பாலானவை பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈஸியா வருமான வரி ரிட்டனை எப்படி தாக்கல் செய்யலாம்..?

அதிலும் குறிப்பாக ராகிங் கொடுமையில் மருத்துவ கல்லுரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் சுமார் 38.6% ராகிங் கொடுமைகள் நடந்துள்ளன. இதில் 35.4% புகர்கள் மிகவும் தீவிரமானதாகும். 45.1% ராகிங் தொடர்பான இறப்புகள் பதிவாகி உள்ளன. இதில் 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மட்டும் 1.1% ஆகும். இந்த காலக்கட்டத்தில் ராகிங் காரணமாக 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன, இது கோட்டாவில் பதிவான 57 மாணவர் தற்கொலைகளுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது. 

இருப்பினும், அறிக்கையில் கொடுக்கப்பட்டதை விட புகார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறினர். முழு இந்தியாவும் 3 ஆண்டுகளில் 3,156 ராகிங் புகார்களை மட்டுமே பதிவு செய்ததாகக் கூற முடியாது, இவை தேசிய ராகிங் எதிர்ப்பு ஹெல்ப்லைனில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் மட்டுமே. கல்லூரிகளுக்கு நேரடியாகவும், வழக்கு தீவிரமாக இருந்தால் நேரடியாக காவல்துறைக்கும் ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

இதுபோன்ற அனைத்து வழக்குகளும் ராகிங் எதிர்ப்பு உதவி எண்ணில் கிடைக்கும் எண்ணிக்கையில் பிரதிபலிக்கத் தவறிவிடுகின்றன, அதனால்தான் இந்த அறிக்கையில். எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி நிறுவனங்களில் கடுமையான ராகிங் சம்பவங்கள் இன்னும் அதிகமாக இருக்கும், ஏனெனில் பொதுவாக ஒரு சிறிய எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தைரியமாக முன்வந்து புகாரளிக்கிறார்கள், மற்றவர்கள் எந்தவொரு புகாரையும் அளித்த பிறகு தங்கள் பாதுகாப்பு குறித்த பயத்தில் அமைதியாக அவதிப்படுகிறார்கள் என்றும் சேவ் அமைப்பு தெரித்துள்ளது.

இதையும் படிங்க: மச்சானுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி: சவுக்கு சங்கரின் டார்க்கெட்: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share