×
 

சீக்கியருக்கு எதிரான கலவரம்; காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமாருக்கு 2-வது ஆயுள் தண்டனை 

வழக்கில இன்று அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டாவது ஆயுள் தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரு வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவா், இரண்டாவது வழக்கில் குற்றவாளியாக கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இந்த வழக்கிலும் இன்று அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு இருப்பதால் இது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டாவது ஆயுள் தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்... காங்கிரஸ் தலைவருக்கு ஆயுள் தண்டனை..!

கடந்த 1984, அக்டோபா் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க் காவலா்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமானோா் கொல்லப்பட்டனா்.

பஞ்சாப் பொற்கோவில் வளாகத்தில் இருந்து இந்திரன் வாழிய உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தமிழ்நாடு கூறிய ஆயுதக் குழுவினர் கொல்லப்பட்டனர் இது சீக்கியர் வெளியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் தான் 1984 ஆம் ஆண்டு பிரதமராக இந்திரா காந்தியை அவருடைய சீக்கியர் பாதுகாவலர்களே சுட்டு வீழ்த்தினார்கள். 

இந்திரா காந்தி படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் செய்கிறார்கள் எனப்படுவது செய்யப்படும் டெல்லி வீதிகளில் சேக்கிழங்கு காங்கிரஸ் ஆதரவு தொண்டர்கள் கொன்று குவித்தனர். சீக்கியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

டெல்லியில் நடந்த கலவரம் தொடா்பாக சஜ்ஜன் குமாா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாலம் காலனி பகுதியில் 5 சீக்கியா்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018-இல் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிரான இவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோா் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளியாக அறிவித்து டெல்லி நீதிமன்றம் பிப். 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை குறித்த விசாரணை, பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்றது. அரசுத் தரப்பிலும் சஜ்ஜன் குமார் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசு தரப்பில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையில், சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே முதல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சஜன் குமார் தற்போது டெல்லி சிகார் திரையில் கண்டனங்களை அனுபவித்து வருகிறார் இந்த நிலையில் இந்த வழக்கிலும் இரண்டாவது முறையாக ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்... தி.க.துணைத்தலைவர் மீதான வழக்கு ரத்து செல்லும்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share