ரூபாய் நோட்டுல ஹிந்தி எழுத்து இருக்கிறதுனால மத்திய அரசுக்கு திருப்பி கொடுத்துவிடுவீர்களா? சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ இ.ராஜாவுக்கு இந்திக்காரர் நறுக் கேள்வி..!
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இடம்பெற்ற ஹிந்தி எழுத்துக்களை அழித்துள்ளார் சட்டமன்ற திமுக உறுப்பினர் இ.ராஜா.
மும்மொழிக் கொள்கை பிரச்சனை தற்போது இந்தி வேண்டாம், மற்றும் வேண்டுமென்ற சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக வருகைக்கு பின் அரசியல் களம் சூடு பிடித்து விட்டது. மும்மொழி பாட திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் அதற்கான நிதியை கொடுக்க முடியாது என சொல்லி சென்றதிலிருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளன.
திமுகவின் இந்தப் போராட்டத்தை வெறும் அரசியல் ஸ்டன்ட் என பிஜேபி விமர்சித்து வரும் வேளையில் திமுகவினரோ ஒரு படி மேலே சென்று ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்,
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த சோகம்..!
மேலும் மத்திய அரசு அலுவலகங்களான தபால் அலுவலகம், சுங்கவரி அலுவலகம், பொதுவுடமை வங்கிகள் என ஹிந்தி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தார் பூசி அழிக்கும் வேளையில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி ரயில் சந்திப்பில் திமுகவின் இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் தென்றல் மற்றும் சிலர் கையில் கருப்பு தார் கொண்டு பொள்ளாச்சி ஜங்ஷன் என்கிற ஹிந்தி எழுத்தை அடித்தனர். இதை பார்த்த பாலக்காடு ரயில்வே போலீசார் உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் சரி செய்து விளம்பரமாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். ரயில்வே போலீசாரின் இந்த நடவடிக்கை அடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இந்தி அழைப்பு போராட்டத்தை தீவிரப் படுத்தி உள்ளனர்
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்களை அழிக்கும் பணியில் அத்தொகுதியின் சட்டமன்ற திமுக உறுப்பினர் இ.ராஜா ஈடுபட்டார். அது சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியானது.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜாவின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதில் தனது கருத்தை பதிவிட்டுள்ள வட மாநிலத்தின் நபர் ஒருவர் பெயர் பலகையை அழித்துவிட்டார்கள் சரி? தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் ஹிந்தி எழுத்துக்கள் கொட்டை கொட்டையாக பொறிக்கப்பட்டுள்ளது, தான் சம்பாதித்து வைத்துள்ள அத்தனை பணத்தையும் மத்திய அரசிடம் மீண்டும் கொடுத்து விடுவாரா? சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த வட மாநிலத்தவரின் கருத்து குறித்து பதிலளித்துள்ள திமுக ஆதரவாளர்கள் அவருக்கு எதிராகவும் பாரதிய ஜனதா கட்சியினர் அவருக்கு ஆதரவாகவும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் ஹிந்தி அழித்த திமுகவினரை தூக்கிய ஆர்பிஎப் போலீஸ்..! ஒரே மணி நேரத்தில் பெயர் பலகை சரி செய்து அதிரடி..!