×
 

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணம்.. தப்பிக்கூட இதை செய்யாதீங்க..!

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.

இந்த ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. 2025 ஆம் ஆண்டு இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழ்வுள்ளது. அதில் ஒன்று இன்றைய தினம் ஏற்படுகிறது. சூரியன், பூமி, நிலவு ஆகியவை சுற்றி வருவதற்கு ஏற்ப அதன் இருப்பிடத்தை குறித்து சூரிய கிரகணம், நூறு ஆண்டுகளுக்கு சந்திர கிரகணம் நிகழ்கிறது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. 

சூரியனின் ஒளி பூமியில் படாதவாறு நிலவின் ஒளி மறைத்துக் கொள்வதுதான் சூரிய கிரகணம். சூரியனின் கதிர்கள் பூமி மீது சில நிமிடங்களுக்கு படாமல் இருக்கும்.

இதையும் படிங்க: தெருநாய்கள் தொல்லை தாங்க முடியல... பிரதமர் மோடியிடம் புலம்பிய கார்த்தி சிதம்பரம்!!

 இந்திய நேரப்படி இன்று மதியம் 2.20 மணி முதல் மாலை 6.13 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது. குறிப்பாக மாலை 4.17 மணிக்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கிரகணம் 3 மணி நேரம் 53 நிமிடங்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆர்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சூரிய கிரகணத்தை காணலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த சூரிய கிரகணத்தை காண முடியாது. 

அமெரிக்காவைப் பொறுத்தவரை சூரிய உதயத்தின் போது அதிகாலை நிகழ்கிறது என்பதால் இதன் தாக்கம் தெரியாது என்றும் கிரகணத்தின் போது தர்ப்பை, துளசி இலைகளை உணவில் அல்லது தண்ணீரை போட்டு வைக்க வேண்டும் என்றும் இதனால் கிரகணத்தால் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தை தடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது

கிரகணம் ஏற்படும் நேரத்தில் கடவுள் வழிபாட்டில் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றும் வீட்டில் பூஜை அறை கதவை மூடி வைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது இந்த கிரகணம் ஏற்படும் நேரம் கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரகணம் ஏற்படும் போது எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக்கூடாது என்றும், பயணங்கள் செய்யக்கூடாது உணவுகளை சமைப்பதோ அல்லது காய்கறிகள் நறுக்குவது உனட்ட வேலைகள் செய்யக்கூடாது, உணவு உண்ணக்கூடாது கர்ப்பிணிகள் கூர்மையான பொருட்களை கையாளக்கூடாது என எப்போதும் கூறப்படும்.

கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை செய்வது போன்றவற்றை செய்ய கூடாது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் சீனாவின் சட்டவிரோத போதைப்பொருள்… இந்தியா மீது பழிபோடும் டிரம்ப் நிர்வாகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share