×
 

ராமர் பாலம் அருகே சுற்றுலா சேவை..! இலங்கை அரசு வகுத்த புதிய திட்டம்..!

ராமர் பாலம் அருகே சுற்றுலா சேவையை தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அதிபர் அநுரகுமார திசய நாயக்க தெரிவித்துள்ளார்.

ராமர் பாலம் என்பது ராமேஸ்வரம் கடலுக்கு, இலங்கை - மன்னார் தீவுக்கு இடையே உள்ள மணல் பாலம். சுமார் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இயற்கையாகவே சுண்ணாம்பு பாறைகளால் உருவான மிக நீளமான பாலமாகும். தமிழில் ராமர் சேது பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆதாம் பாலம் என அழைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனுஷ்கோடி அருகே ராமர் பாலமாக கருதப்படும் பகுதியில் சுற்றுலா படகு சேவையை தொடங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்காக சில மணல் திட்டுகளை தனியார் பயன்படுத்திக் கொள்ளவும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. தலைமன்னார் ராமேஸ்வரம் பயணிகள் படகு சேவை தொடங்கப்படும் என அதிபர் அநுரகுமார திசய நாயக்க தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் - மன்னார் இடையே மீண்டும் படகு சேவை..இந்தியாவுடன் பேச்சுவார்த்தை.. இலங்கை அதிபர் அறிவிப்பு!

இதையும் படிங்க: அத்துமீறும் இலங்கை கடற்படை.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share