மதராஸா மாணவர்கள் 25 ஆயிரம் பேர் தவிப்பு: உ.பி. , மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதராஸாவில் பயிலும் 25 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பது குறித்து தாக்கல் செய்த மனுவை ஏற்று உ.பி அரசுக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதராஸாவில் பயிலும் மாணவர்கள் ஃபாசில்(முதுநிலை பட்டப்படிப்பு), காமில்(இளநிலை பட்டப்படிப்பு) ஆகியவற்றைப் பயில்வது பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்துக்கு விரோதமானது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் “ உபி. மதஸா கல்வி வாரியம் சட்டம் 2004, உயர் கல்வியான ஃபாசில் மற்றும் காமில் படிப்புகளை தொடர முடியாது, நடத்தவும் முடியாது. அவ்வாறு செய்வது பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானது. யுஜிசி மட்டுமே உயர்கல்வி படிப்புகளை வழங்க அதிகாரம் கொண்டது” எனத் தெரிவித்திருந்தது.
இந்தத் தீர்ப்புக்குப்பின் உ.பியில் மதராஸாவில் பயிலும் 25ஆயிரத்துக்கும் மாணவர்களை உ.பி. அரசு கண்டு கொள்ளவில்லை, அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்தும், வேறு கல்லூரிகளுக்கு மாற்றுவது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் இந்த மாணவர்கள் திக்கற்ற நிலையில் தவிக்கிறார்கள். இதையடுத்து, முகமது லாமன் ராசா தலைமையில் பல மாணவர்கள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் தங்கள் நிலை குறித்து முடிவு எடுக்க உ.பி. அ ரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சஞ்சீவ் மல்ஹோத்ரா மூலம் மனுத் தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: மூளையில் இருந்த வக்கிரத்தை வாந்தியெடுத்துவிட்டாய்.. யூடியூபரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை..!
தங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும், மாற்று ஏற்பாடு, மாற்றுக் கல்வி தராமல் இழுத்தடிப்பது அடிப்படை உரிமைகளான சமத்துவ, மாண்புடன் நடத்தும் உரிமைக்கு விரோதமானது எனத் தெரிவித்திருந்தனர். தங்கள வேறு கல்லூரிக்கு மாற்றவும், வேறு கல்வி கிடைக்கவும் மத்திய அரசும், மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களுக்கு உறைவிடம், உணவுக்கான தேவையையும் நிறைவேற்றவில்லை, தேர்வுகளையும் நடத்தவில்லை. இதனால் எங்களின் எதிர்காலம் குறித்த பெரிய கவலை உருவாகியுள்ளது. காமில், பாசில் படிப்பு பயிலும் மாநிலத்தில் உள்ள 25 ஆயிரம் மாணவர்கள் நிலை எதிர்காலம் கவலைக்குரியதாக மாறிவிட்டது என்று மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், உ.பி அரசும், மத்திய அரசும் பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது
இதையும் படிங்க: அலுவலகத்தில் பணியாளரை அதிகாரி திட்டுவது குற்றமில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!