மணிப்பூர் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுடன் 22ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திப்பு..!
மணிப்பூர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை வரும் 22ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திக்க உள்ளனர்.
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு வரும் 23ம் தேதி நேரில் சந்தித்துப் பேச உள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தேசிய சட்ட சேவை ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சார்பில் நீதிபதிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளனர். அது மட்டுமல்லாமல் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் 20-வது ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார்கள்.
தேசிய சட்ட சேவை ஆணையத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் உள்ளனர்.
இதையும் படிங்க: வன்முறை எதிரொலி.. மணிப்பூர் செல்லும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள்..!
தேசிய சட்ட சேவை ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) வெளியிட்ட அறிக்கையில் “ 2023, மே 3ம் தேதி தொடங்கிய இனக் கலவரத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தனர், தொடர்ந்து இன்னும் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதன் மூலம் அவர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் மனித நேய உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
நீதிபதி காவே மணிப்பூர் முழுவதும் சட்ட சேவையையும், மருத்துவ சேவையையும் காணொலி வாயிலாகக் தொடங்கி வைக்கிறார். கிழக்கு இம்பால், உக்ருல் மாவட்டங்களில் சட்ட உதவி கிளினிக்களும் அமைக்கப்படும். முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அரசின் நலத்திட்ட நிகழ்ச்சிகளோடு, சட்ட சேவை முகாம்கள் நடத்தவும், சென்னையில் இருந்து 25 சிறப்பு வல்லுநர்கள் மருத்துவக் குழு வந்து மருத்துவ முகாம்களும் நடத்த உள்ளன.
மணிப்பூரில் உள்ள சட்ட சேவை ஆணையம் சார்பில் முகாம்கள் முழுவதும் 273 சட்ட கிளினிக்கள் நடத்தி இடம் பெயர்ந்தவர்களுக்குத் தேவையான அரசின் உதவிகள், திட்டங்கள், பயன்கள், மருத்துவ உதவிகள் கிடைக்கத் துணை புரியும்
இதையும் படிங்க: சிஏஜி நியமனத்தில் மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு..!