×
 

சிஏஜி நியமனத்தில் மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு..!

சிஏஜி நியமனத்தில் மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி நியமனத்தில் முற்றிலும் மத்திய அரசு கட்டுப்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்தாவது:

மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை குடியரசுத் தலைவர், கட்சி சார்பற்ற குழுவான பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் ஆலோசனை, கலந்தாய்வு செய்து நியமிக்க வேண்டும்.

இதையும் படிங்க: திமுக - மத்திய அரசு மோதல்..! ‘மொழி மதச்சார்பின்மையை ஆதரித்த உச்சநீதிமன்றம்’.. ஓர் பார்வை..!

ஆனால், பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநில அரசின் தணிக்கை அறிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தாக்கல் செய்யப்படவில்லை, மத்திய அரசின் மீதான தணிக்கைகளில் நிலையான சரிவு காணப்படுகிறது, கடன் நிலைத்தன்மை குறித்த செயல்திறன் தணிக்கை கிடப்பில் போடப்பட்டது, சிஏஜியில் பல காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. மத்திய அ ரசுதான் மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி நியமனத்தில் முழுக் கட்டுப்பாடு வைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாந்த் பூஷன் வாதிடுகையில் “ சிஏஜி தலைவரை நியமிப்பதில் முழுமையான கட்டுப்பாட்டை மத்திய அரசு வைத்திருக்கிறது.

மத்திய அ ரசு, மாநில அரசுகளின் நிதிசெலவுகளையும், பஞ்சாயத்து ராஜ் நிதிசெலவுகளையும் கண்காணிக்கும் தலைவர் நியமனத்தை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் 148(1) பிரிவின்படி, மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி என்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதி அதிகாரத்துக்கு இணையானவர். உச்ச நீதிமன்ற நீதிபதியை எவ்வாறு பதவி நீக்கம் செய்ய முடியுமோ அதேபோன்றுதான் சிஏஜி தலைவரையும் நீக்க முடியும்.

சிஏஜி தலைவரை யாரும், எந்த அரசும் தன்னிச்சையாக நீக்க முடியாது என்பதற்காகவும், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவும் அவருக்கு அரசியலமைப்புச்சட்ட பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது சிஏஜி நியமனத்தில் மத்திய அரசின் மேலாதிக்கம் குறித்து கேள்வி எழுப்பும் நேரம் வந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு சமீபத்தில் தலையிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க, நடுநிலையான தேர்வுக் குழுவை நியமித்து, தேர்தல் ஆணையர்கள் நியமனங்களில் மத்திய அரசின் பங்கைக் குறைக்க, வேண்டியிருந்தது.  

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் நியமன செயல்முறைகளிலும், தகவல் ஆணையர்களின் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் இதேபோன்ற தலையீடுகளைச் செய்தது. முக்கிய அரசியலமைப்பு அமைப்புகளுக்கான நியமனங்கள் மீது மத்திய அரசு நிர்வாகத்திற்கு பிரத்யேக கட்டுப்பாட்டை வழங்குவது சுதந்திரத்தை இழக்கும் வழிமுறை என்று வாதிட்டார்.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி சூர்யகாந்த், “நீதிமன்ற தலையீடு என்பது, சிஏஜி தலைவர் நியமனத்தைக் குறித்தும் அரசியலமைப்புச் சட்டம் 148 பிரிவை திருத்தி எழுதுவதற்கு சமமானதா. சிஏஜி தலைமை அதிகாரி நியமனம் என்பது நம்பகத்தன்மையாக இருக்க வேண்டும். ஆளுநர்கள், அட்டர்னி ஜெனரல்கள்கூட மத்திய அரசின் ஆலோசனையின்பெயரில் குடியரசுத் தலைவர்தான் நியமிக்கிறார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வரி கொடுக்க முடியாதுனு சொல்லித்தான் பாருங்களேன்! திமுகவை உசுப்பி விட்ட சீமான்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share