திமுக அரசுக்கு பெரும் சிக்கல்..! ED சோதனைக்கு எதிரான டாஸ்மாக் வழக்கு தள்ளுபடி..!
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறை இந்த விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனம் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அமலாக்கத்துறையின் மீது முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், டாஸ்மாக்கில் நடந்த முறைகேட்டின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததால் தான் சோதனை நடத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை வாதிட்டது.
இதையும் படிங்க: சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனையை சட்டவிரோதம் என அறிவித்து, நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு என தனிதனியாக வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை பொறுத்தவரை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என கூறி அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பா.? கலங்கி நிற்கும் விவசாயிகள்.. அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை!!