×
 

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் புகைப்படம் வெளியீடு..! ஒருமாத திட்டம் என அதிர்ச்சி தகவல்..!

பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தின் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் வெளியேறி வரும் நிலையில் அங்கு பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. பால்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் 12க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலின் போது சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகளின் உத்தேச வரைபடம் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆண்களின் பேண்ட்டை கழற்றச் சொல்லி.. மதத்தை உறுதி செய்து கொன்ற தீவிரவாதிகள்: உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர்..!

புகைப்படத்தில் உள்ள நான்கு பேரும் ஒரு மாத காலமாக திட்டமிட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிப் ஷேக், ஆசிப் பௌசி உள்ளிட்டோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் பதிலடிக்கு பயம்... இரவு முழுவதும் நடுக்கத்தில் நெளிந்த பாகிஸ்தான் ராணுவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share