ஆண்களின் பேண்ட்டை கழற்றச் சொல்லி.. மதத்தை உறுதி செய்து கொன்ற தீவிரவாதிகள்: உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர்..!
காஷ்மீரில் தீவிரவாதிகள் நேற்று சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியபோது, மதத்தை உறுதி செய்ய சில ஆண் பயணிகளின் பேண்ட்டை கழற்றச் சொல்லி மதத்தை உறுதி செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் பஹல்காம் மண்டலம். பைன் மரக்காடுகள் அடர்ந்திருக்கும் இந்தப் பகுதி, இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது, தீவிரவாதிகள் திடீரென சுற்றுலாப்பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இரு வெளிநாட்டவர், என்ஆர்ஐக்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப்பின் தீவிரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலில் உயிர்பிழைத்த பெண்கள், ஆண்கள், அங்கு கண்ட காட்சியை தற்போது சாட்சியங்களாக வெளியிட்டுள்ளனர். இதில் தீவிரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தும் முன் அவர்களின் அடையாள அட்டை, உடல் அடையாளம், மதம் ஆகியவற்றைக் கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் பதிலடிக்கு பயம்... இரவு முழுவதும் நடுக்கத்தில் நெளிந்த பாகிஸ்தான் ராணுவம்..!
ஆண் சுற்றுலாப் பயணிகளை அவர்களின் பேண்ட்டை கழற்றக்கூறிய தீவிரவாதிகள், அவர்களின் அந்த உறுப்பு, இஸ்லாமியர்கள் செய்வது போல் சுன்னத் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து மதத்தை உறுதி செய்து தாக்குதல் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில தீவிரவாதிகள் சுற்றுலாப்பயணிகளைக் கொல்லும்போது உன் மதநம்பிக்கை என்ன எனக் கேட்டு அவர்களின் பதில் கிடைத்தபின் கொன்றனர் என்று உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். தீவிரவாத தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரு பெண் போலீஸாரிடம் கூறுகையில் “நானும், என் கணவரும் ஓடும்போது பிடித்த ஒரு தீவிரவாதி என் கைகளில் வளையல்கள் இருந்தன. இதைப் பார்த்த அந்த தீவிரவாதி நாங்கள் இந்து என்பதை உறுதி செய்தார். அதன்பின் என் கணவரிடம் உன் பெயர், மதம் ஆகியவற்றை கேட்டு அவர் கூறியதும் என் கண்முன்னே கணவரை சுட்டுக்கொன்றனர்” என கண்ணீருடன் தெரிவித்தார்.
சுற்றுலாப்பயணிகளை நோக்கி தீவிரவாதிகள் 50 ரவுண்டுகள் வரை 3 முதல் 5 நிமிடங்கள் வரை சுட்டுள்ளனர். அதிலும் சுற்றுலாப்பயணிகளுக்கு நெருக்கமாக நின்றுதான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதால், குண்டுகாயம் பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “கொல்லப்பட்ட 25 சுற்றுலாப்பயணிகளில் ஒருவர் உள்ளூர்வாசி. பலர் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரென்ட்(டிஆர்எப்) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்..! ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்..!