பொன்முடி சொன்னது விலைமாது கதையின் பாதி... க்ளைமேக்ஸை சொல்லி திமுக-வை பொசுக்கிய ரர.க்கள்..!
போனவன் என்ன சொன்னான் என்றால் நாங்கள் கோயிலுக்கு போக மாட்டோம். எங்களுக்கு சைவமும் கிடையாது வைணவமும் கிடையாது.
சில தினங்களுக்கு முன்பு தந்தை பெரியார் விழா பொதுமேடையில் பெண்கள் மத்தியில், வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பொதுமக்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். திமுக துணைப் பொதுச்செயாளர்களில் ஒருவரான கனிமொழி எம்.பி, ''அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கழக துணைச்செயலாளர் பதவி வகித்து வரும் பொன்முடி அப்பதவியில் இருந்து நீக்கினார். இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்தும் அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்கவில்லை.
இதையும் படிங்க: திமுகவுக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. அதிமுக - பாஜக கூட்டணியை சிலாகிக்கும் ஜி.கே. வாசன்.!!
''தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் மகளிர். விலைமாதுவின் வீட்டிற்கு ஒருத்தன் போகிறான்.போகும்போது அங்கே அந்த அம்மா கேட்குது. நீங்க சைவமா? வைணவமா? எனக் கேட்கிறார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் ஏதாவது 5 கொடு கொடு, 10 கொடு எனக்கேட்டால் புரிந்து இருக்கும். என்னடா இங்கே வந்து இந்தப்பெண் சைவமா? வைணவமா எனக் கேட்கிறார்..? எனக்கு ஒண்ணும் புரியவில்லையே எனக் கேட்டான். அதற்கு அந்த விலைமாது சைவம் என்றால் இப்படி..? வைணவம் என்றால் இப்படி என கைகைகளை வைத்து விவரிக்கிறார். அவனுக்கு ஒண்ணும் புரியல.
அந்த விலைமாது சைவம் என்றால் படுத்துக் கொள்வது. வைணவம் என்றால் நின்று கொண்டு செய்வது? நின்று செய்தால் 5... படுத்துக் கொண்டால் 10...'' என ஆபாசமாக பேசி இருந்தார் பொன்முடி. இந்நிலையில்ர் பாதி கதைதான் சொல்லி இருக்கிறார் எனக் கூறி அதிமுக தொண்டர் ஒருவர் மீதிக்கதையை சொல்லி திமுகவினரை அதிர வைத்து இருக்கிறார்.
இதுகுறித்து கே.என்.ஆர்.சிவராஜ் தனது எக்ஸ்தளப்பதிவில், '' வனத்துறை அமைச்சர் பொன்முடி விலைமாது சம்பந்தமாக ஒரு கதை சொல்லி இருந்தார். நீங்கள் எல்லாம் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அவர் அந்தக் கதையை முழுதாக சொல்லவில்லை. விலைமாது சைவமா? வைணவமாக எனக் கேட்டார்கள். ஆனால் போனவன் என்ன சொன்னான் என்றால் நாங்கள் கோயிலுக்கு போக மாட்டோம். எங்களுக்கு சைவமும் கிடையாது வைணவமும் கிடையாது. ஆனால் எங்கள் பொண்டாட்டிகளை கோயிலுக்கு அனுப்பி வைத்து விட்டு வரங்களை அழுந்தாமல் சாமியிடம் இருந்து தூக்கி விட்டு வந்துவிடுவோம்.
நாங்கள் அப்பேற்பட்ட இயக்கத்தை சார்ந்தவர்கள் எனச் சொன்னானாம். உடனே அந்த விலைமாது சொன்னாராம்... '' ஏம்பா உங்க முன்னோடி ஒருத்தரு எல்லாத்தையும் முடித்துவிட்டு சத்தம்போடட்டா..? போலீஸிடம் காட்டிக் கொடுக்கவா? எனக் கேட்டு மிரட்டி இருப்பதையும் பிடிங்கிட்டு போயிட்டாரு.... அதனால உங்களோட சங்காத்தமே வேண்டாம்'' என விரட்டி விட்டுட்டாங்களாம். இதுதான் முழுக்கதை'' எனத் தெரிவித்துள்ளார்.
பொன்முடி சொன்ன விலைமாது கதையின் மீதி பாதி...
— KNR Sivaraj (@knrsivaraj80) April 11, 2025
🚶🚶🚶 pic.twitter.com/QMyKbKXRbZ
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு இதுதாங்க காரணம்.. மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் ஒரே போடு.!