×
 

ஆளுநரும் ஆட்சியும் ரயில் தண்டவாளம் போல..அதிமுக செம்மலை ரிக்வெஸ்ட்..!

ஆளுநரும் ஆட்சியும் ரயில் தண்டவாளம் போல இணைந்து இருக்க வேண்டுமே தவிர மோதுகிற நிலை இருக்கக் கூடாது என அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை வலியுறுத்தியுள்ளார்..

சட்டப் பேரவையில் உரையைப் படிக்காமல் மூன்று ஆண்டுகளாக ஆளுநா் புறக்கணித்து வருகிறாா். பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். நாங்கள் தேசியகீதத்தை அவமதிக்கவில்லை. தமிழ்நாடு குறித்து எதுவும் தெரியாமல் ஆளுநா் உள்ளாா். மத்திய அரசு உடனடியாக ஆளுநரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் எஎன்று ஆளும் திமுக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் ஆளுநரும் ஆட்சியும் ரயில் தண்டவாளம் போல  இணைந்து இருக்க வேண்டுமே தவிர மோதுகிற நிலை இருக்கக் கூடாது  என அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தஞ்சை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் மயில் இறகை வைத்து தடவுவது போல மென்மையாகத்தான் தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.மென்மையாக இல்லாமல் கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் முன் வர வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள் என்றார்.

திமுகவை கடுமையாக எதிர்க்க எதற்கு தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை என கேள்வி எழுப்பினார்.
மக்கள் நலன் கொண்டு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேற வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் இவர்களை மதிப்பார்கள் என்றார்.துரோகத்திற்கு துணை போவது போல  துணை நின்றால் மக்கள் கோபத்திற்கும் மக்கள் வெறுப்புக்கும் இந்த கூட்டணி கட்சி ஆளாகும் இந்த தவறை அவர்கள் செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டார்.

ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறுவதற்கான சூழலை அதற்கான காரணத்தை ஆட்சியாளர்களே உருவாக்குகிறார்கள் என்று நான் கருதுகிறேன்  ஆட்சியாளர்கள் தயாரிக்கிற அந்த உரையை தான் ஆளுநர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அது மரபு என்று சொல்கிறார்கள் அதை நான் ஒத்துக் கொள்கிறேன் சட்டம்தான் மாற்றாமல் இருக்க வேண்டுமே தவிர மரபு மாற்றக்கூடியது.ஆளுநர் அறிக்கை அரசால் தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் பொழுது ஆளுநர் சில திருத்தங்களை செய்ய சொல்கிறார் அந்த திருத்தங்களை இவர்கள் செய்து இருந்தால் ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டு வெளிநடப்பு செய்திருக்க மாட்டார் ஆளுநர் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால் அவர் இது போன்ற செயலில் ஈடுபடுகிறார் இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் ஆளுநரும் ஆட்சியும் ரயில் தண்டவாளம் போல இணைந்து இருக்க வேண்டுமே தவிர மோதுகிற நிலை இருக்கக்கூடாது எதிர்காலத்தில் இது போன்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என செம்மலை தெரிவித்தார்.

இதையும் படிங்க: இதுபோல 100 ‘சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும் என சட்டப்பேரவையில் கர்ஜித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share