×
 

'ஸ்டார் ஹோட்டல்' ரகசியம்... விஜய் போட்ட உத்தரவு... பரபரப்பாகும் தவெக முகாம்..!

கூட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக நிர்வாகிகள் தங்களது  செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 
5 நடசத்திர விடுதி உள் அரங்கில் நடைபெற உள்ளது.

அக்கட்சியின் தலைவர் விஜய்,தேர்தல் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் ஆலோசகர்கள் பிரசாந்த் கிஷோர், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் 2026 தேர்தலுக்கான வியூகம் , யுக்திகள், அரசியல் ரகசியங்கள் பற்றி பேசி கலந்தாலோசிக்க இருப்பதால் இந்த விழா பொதுவெளி கூட்டமாக அமையாமல் உள்ளரங்க கூட்டமாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டுதொடக்க விழா, மாமல்லபுரம், பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதி யில் நாளை காலை 7.45 மணிக்கு நடைபெற இருக்கிறது. விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்குப் பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோர் வருவது உறுதி...நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்...கடுப்பில் இருவர்


 
இந்தக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி, கட் சியை பலப்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ரகசிய ஆலோசனை கூட்டமாகவே இந்த நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும், கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்து டன் தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் பங்கேற்க இருக்கிறார். அதற்காக சற்று முன்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார் பிரஷாந்த் கிஷோர்.

தமிழக வெற்றிக் கழத்தின் அரசியல் ஆலோசனை குழுவில் உள்ள ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டம் முழுவதும் 2026 தேர்தல் வியூகத்தை மேற்கொள்வதற்கான கூட்டமாகவே அமையவிருக்கிறது. தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள 95 மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 600 பேர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


 
நிர்வாகிகளுக்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பயிற்சியை பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வழங்க உள்ளனர். மக்களை எவ்வாறு சந்திப்பது,  எதை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்? மற்ற கட்சிகளில் இருந்து 
வேறுபட்டு மக்கள் சேவை ஆற்றுவது எப்படி என அவர்கள் தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்க உள்லனர்.அதன்பிறகு கட்சியின் தலைவர் விஜய் கூட்டத்தில் பேசுகிறார். 

கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதால், கூட்டத்திற்கு நுழைவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. நுழைவு அட்டை இல்லாதவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை.


 
கூட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக நிர்வாகிகள் தங்களது  செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முதலில் பொது விழாவாக திறந்த வெளியில் நடந்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அரசியல் ரகசியங்கள் பேசும் நிகழ்வுக்கு பொது மேடை சரியாக இருக்காது என்பதால் கடைசி நேரத்தில் ஓட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார். 

இதற்கிடையே, தமிழகவெற்றிக்கழகத்தின் ஆண்டு தொடக்க விழாப் பணிகளை மேற்கொள்ள 18 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2ம் ஆண்டு விழாவிற்கு தயாராகும் தவெக... பங்கேற்பாளர்கள் முதல் ஏற்பாடுகள் வரை  முழு விவரம் இதோ...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share