×
 

டாக்டர் வேடத்தில் கொள்ளை.. கறவை மாடு திருடியவர்களுக்கு அடி, உதை..!

சங்கராபுரம் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள் போல் நாடகமாடி பல்வேறு கிராமங்களில் கறவை பசு மாடுகளை திருடிய கும்பலை விவசாயிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர் அதே கிராமத்தில் இரண்டு கால்நடை பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்தோணிராஜ் நேற்று, தனது இரண்டு பசு மாடுகளையும் மேய்ச்சல் செய்து விட்டு, தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே உள்ளே மாட்டு கொட்டகையில் மாட்டை கட்டி வைத்துள்ளார்.

அதன் பின், அந்தோணி ராஜ் உணவருந்துதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட சிட்டந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் ராமராஜபுரம் கிராமத்தைச் சார்ந்த குமார் ஆகிய இரண்டு நபர்களும் அந்தோணி ராஜ் வீட்டுக்கு சென்றவுடன் மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த அவரது இரண்டு கறவை மாடுகளை டாட்டா ஏசி வாகனங்கள் மூலம் ஏற்றி திருடியுள்ளனர். 

மாடுகள் கத்தியபடியே  சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்தோணி ராஜன் மாட்டுக்கொட்டையின் அருகில் இருந்த விவசாயிகள் சந்தேகப்பட்டு இருவரையும் பிடித்து உள்ளனர். இருவரிடமும் கறவை மாடுகளை எங்கே ஏற்றிச் செல்கிறீர்கள்? என்று கேட்டு உள்ளனர். நாங்கள் இருவரும் கால்நடை மருத்துவர்கள். கறவை மாடுகளை சினை ஊசி போடுவதற்காக ஏற்றி செல்கிறோம் என கூறியுள்ளனர்.

பால் கறந்து கொண்டு இருக்கும் மாடுகளை எதற்காக சினைக்கு அனுப்ப வேண்டும்? என விவசாயிகள் எதிர் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் மழுப்பலான பதில் கூறி உள்ளனர். சந்தேகம் அடைந்த அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அந்தோணி ராஜுக்கு தகவல் கொடுத்தனர். 

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன்.. துபாயில் இருந்தபடியே தீர்த்துக்கட்டிய மனைவி.. கம்பி எண்ணும் கள்ளக்காதலன்..!

பதறிப் போய் பதட்டத்துடன் உடனடியாக மாட்டுக்கொட்டைக்கு வந்த அந்தோணி ராஜ், இவர்கள் யார் என்று தெரியாது என கூறி உள்ளார். உடனே மாடு திருடர்கள் சக்திவேல், குமார் அங்கிருந்து தப்பி ஒட முயற்சித்துள்ளனர். மேலும் அந்தோணி ராஜ் மற்றும் அங்கிருந்த விவசாயிகள் கையும் களவுமாக மாடு திருடர்களை பிடித்து விசாரித்த உள்ளனர்.

விவசாயிகளின் கவனிப்பால் அவர்கள் இருவரும் கறவை மாடுகளை திருடி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து போலீசார் தஙக்ளது பாணியில் விசாரணை செய்து உள்ளனர்.

அப்போது சக்திவேல் மற்றும் குமார் ஆகிய இருவரும் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே கறவை மாடுகளை திருடியது போலீசாரின் விசாரணைகள் தெரியவந்தது  அந்தோணி ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கால்நடை கறவை மாடுகளை திருடி குற்றத்திற்காக இருவர் மீது வழக்கு பதிவு செய்த சங்கராபுரம் போலீசார், இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் போல நாடகமாடி கறவை பசு மாடுகளை திருடிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்த சம்பவம் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தங்கக்கட்டிகள் வழிப்பறி வழக்கு.. போலீஸ் தேடியவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share